Monday, May 30, 2011

இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள் (புத்தகத் தொடர்)

இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள் (புத்தகத் தொடர்)
அறிமுகம்
ஆன்மீகத்தை மட்டும் போதிக்காமல் அதையும் கடந்து முழு மனித சமுதாயமும் சுபிட்சம் பெற்று வாழத்தேவையான அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டி நடாத்திச் செல்லும் மார்க்கமே இஸ்லாம். பகுத்தறிவும் பதில் சொல்லத் திணறும் இன்றைய நவீனகால சிக்கல்களுக்கும் மிக எளிதானத் தீர்வுகளை விளக்கிச் சொல்லும் மார்க்கமே இஸ்லாம். இம்மார்க்கத்தின் மீது எல்லாக் காலக்கட்டங்களிலும் பலமுனை தாக்குதல்கள் இருந்தே வந்திருக்கின்றன இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தாக்குதலில் ஒன்றுதான் இன்றைய நவீனகாலத்து மருத்துவமுறை. இம்முறையைப் பற்றி மத்திய காலத்தை கடந்து விட்ட மதமான- மார்க்கமான இஸ்லாம் அறிந்து வைத்திருக்க வாய்ப்பேயில்லை? என்ற அவசர முடிவுக்கு வந்தவர்களுக்கு சகோதரர் ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் வரைந்த 'இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சாவல்கள்' என்ற சிறிய நூலில் இஸ்லாம் மத்தியகாலத்தையும் கடந்து அது எல்லாக்காலங்களிலும் வழிகாட்டியே வந்த- இனிவரும் காலத்திலும் வழி நடத்திச் செல்லும் ஒரே இறை மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு வெளிச்சம் போட்டு விளக்கியுள்ளார். 
(இந்நூல் மீதான கருத்தோட்டங்கள் மற்றும் விமர்சனங்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்)
 நூலாசிரியரின் உரை...

பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கும் வாய்ப்பை அழைப்புப் பணி ஏற்படுத்திக்கொடுத்தது முஸ்லிம்களுக்கு மத்தியிலான பிரச்சாரம் மட்டுமின்றி கொள்கை கருத்துப் பறிமாற்றங்களுக்காக மற்றுமத சகோதர - சகோதரிகளோடு பேசும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய கொள்கையை விளங்குவதற்காக கேட்கப்படும் கேள்விகளும் விமர்சனமாக வந்து விழுந்த குற்றச்சாட்டுகளும் அனேகம். மதவழியாக மட்டுமே புரிய வைக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இதுவும் ஒரு மதம் என்ற நிலையிலேயே வைத்துள்ளார்கள் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள்.
மனித மனங்களையும் காலத்தையும் சூழ்நிலையையும் வெல்லும் சக்தி இஸ்லாமியக் கொள்கை மற்றும் சட்டக் கோட்பாடுகளில்தான் உண்டு என்று விளக்கும் தருணங்களில் உள்ளத்தில் வஞ்சமில்லாத சகோதர சகோதரிகள் வியப்பில் ஆழ்வதைக் காணமுடிகிறது. கடவுளை நெருங்கும் வழியை மட்டும் சொல்லிவிட்டு மனித வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாத மதக்கோட்பாடுகளையும் கடவுளையும் அன்பையும் மட்டும் சொல்லியுள்ள மதக்கோட்பாட்டையும், கடவுளை மற மனிதனை நினை என்ற மதக்கோட்பாட்டையும், கண்டுள்ள மக்கள் பள்ளிவாசலுக்குத் தொழச்செல்லும் குறைந்த அளவிலான மக்களைப் பார்த்து... இறை வணக்கத்தைச் சொல்லும் மதங்களில் இதுவும் ஒன்று... என்று இஸ்லாத்தை விளங்கியுள்ளதில் புதிர் ஒன்றுமில்லை.
ஆனால் இஸ்லாமிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது அது கொள்கையாகவோ சட்ட விளக்கமாகவோ விஞ்ஞான உண்மைகளாகவோ எதுவாக இருந்தாலும் அதை மனம் திறந்து ஏற்கும் மாற்றுமத சகோதர சகோதரிகளை காணும்போது மனநிறைவு ஏற்படுகிறது.
உலகில் உள்ள மனிதர்கள் சந்திக்கக் கூடிய எல்லாப் பிரச்சனைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசியுள்ளது தீர்வு சொல்லியுள்ளது என்று நாம் கூறும்போதெல்லாம் நவீனகால விஞ்ஞானத்தையெல்லாம் இஸ்லாம் பேசியுள்ளதா? பேசும் வாய்ப்புள்ளதா? இது சாத்தியமா? போன்ற ஆச்சரியங்கள் வெளிப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
இஸ்லாமிய மூலங்களிலிருந்து நவீன காலப்பிரச்சனையை ஆராயத்துடிக்கும் தமிழ் மக்களுக்கு அதற்காக வழி காண்பிக்கும் வகையில் நவீன மருத்துவத்துறை குறித்து இஸ்லாமிய தொடர்பை இந்நூலில் விளக்கியுள்ளேன். இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளும் சமீபத்திய விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ள புதிய மருத்துவ கேள்வியும் இதில் இடம்பெறுகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரத்ததானம், சிறுநீரக தானங்கள், டெஸ்ட் டியூப், டார்வினிஸ்டுகளுக்கு சவால்விடும் கருவறை நிலைப்பாடுகள், குடும்பக்கட்டுப்பாடு, குளோனிங், பலநூறு ஆண்டுகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் போன்ற மருத்துவத் துறைகளை இஸ்லாம் அணுகும் விதத்தை இந்நூலில் நீங்கள் காணலாம்.
மருத்துவத்துறை என்பது மிக மிக விசலமானது எல்லைக்கோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் தொடரக்கூடியது. வளர்ந்து நிற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி, வளர்ந்து வரும் ஆக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கேள்விகள் இந்நூலில் இடம்பெறவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்புகளில் இக்குறை நிவர்த்தி செய்யப்படும்.
இந்நூலில் குறைபாடுகள் இருக்குமானால் அதற்கு என் பலவீனங்களே காரணமாகும். நிறைகள் அனைத்திற்கும் அவற்றின் புகழுக்கும் சொந்தக்காரன் இறைவனே. தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் உரிமை இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
அழைப்பாளன் பதிப்பகத்தின் நிர்வாகிகளான நேசத்திற்குரிய நண்பர்கள் அனைவரும் என் நன்றிக்கு உரியவர்கள். எல்லோருக்குமாக இறையருள் வேண்டி...
பிரியமுடன்.
ஜி.நிஜாமுத்தீன்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks