Tuesday, April 9, 2013
பள்ளிவாசல் நிர்வாகிகள் (முத்தவல்லிகள்)
காலம் கடந்த புலம்பல்! அபூ பௌஸீமா
மத்ரஸாக்களுக்கு அடுத்து நமது கவனத்தில் வர வேண்டிய ஒரு முக்கியமான இடம்தான் பள்ளிவாசல்கள். பள்ளிவாசல்களில் பரிபாலனம் செய்யும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் என்ற எச்சரிக்கையோடு ஆரம்பிப்பது பொருத்தமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்.)
பள்ளிகளில் டிரஸ்டிகளாக இருந்துவிட்டால், 'தாம்தான் இஸ்லாத்தின் பொறுப்புதாரிகள், தாங்கள் என்ன கட்டளையிடுகிறார்களோ அந்தக் கட்டளைப் பிரகாரம்தான் ஊர் மக்கள் நடக்க வேண்டும்,; அல்லாஹ்வின் கட்டளையோ அவன் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலோ தம்மை ஒன்றும் செய்யாது,; தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படுவதுதான் ஜமாஅத்தின் கடமை,;" இவைதான் அவர்களின் நிலைப்பாடு.
அல்லாஹ் அவனுடைய கட்டளைகளைத் திரித்து மார்க்கத்தில் புதியனவற்றை - பித்ஆ - புகுத்துகிறவர்களை மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.
அப்படி மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துபவர்களைப் பற்றியும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றியும் எச்சரித்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கை சிந்திக்கக் கூடியவர்களுக்கு நல்வழிப்படுவதற்குப் போதுமானது.
இன்று பள்ளிவாசல்களிலேயே மீலாத் விழாக்கள், கந்தூரிகள், சாம்பிராணிச் சட்டி ஏந்தி பத்தி கொழுத்தி புரோகிதங்கள் நடைபெறுவதைப் பார்க்கிறோம்.
இவற்றையெல்லாம் அரங்கேற்றி வைப்பவர்களில் முன்னின்று உழைப்பவர்கள் டிரஸ்டிகள் பலரும் உலமாக்கள் பலரும்தான்.
அபூஹ{ரைரா ரளியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள், ''என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்,; ஏற்க மறுத்தவரைத் தவிர"" என்று கூறினார்கள். மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?"" என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள், ''எனக்குக் கீழ்ப்படிந்தவர்கள் சொர்க்கம் புகுவர்,; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்"" என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி)
இங்கே தெளிவாக நமக்குத் தெரிகிற ஒன்றுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்,; மாறு செய்தவர்கள் நரகம் புகுவார்கள் என்பது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள்தான் பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்று இதன் மூலம் மிகவும் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருக்க பள்ளிகளில் இன்று டிரஸ்டிமார்கள் அரங்கேற்றி வைக்கும் கந்தூரிகள், பாத்திஹாக்கள், மீலாத் விழாக்கள் ஏராளம். சீதனக் கொடுப்பனவுகளை கண்மூடி, வாய்பொத்தி, காதடைத்து வீற்றிருக்கும் காட்சிகள்.
புகாரியில் பதியப்பட்டுள்ள மற்றுமொரு ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பிறகு எவ்வளவுக்கெவ்வளவு முஸ்லிம்கள் வழிகேட்டிலாவார்கள் என்பதை முன்னறிவிப்புச் செய்கிறது.
இந்த முன்னறிவிப்புகள் எல்லாம் ஏன் என்று சிந்தித்துப் பார்ப்பவர்களுக்குப் பாடமாக விளங்கும்.
அப்படிப்பட்ட காலத்தில் ஏற்படக் கூடிய இப்படிப்பட்ட வழிகேட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான அறிவுறைகள்தான் அவை என்பதை ஏனோ இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோர் உணரத்தவறி விட்டனர். இனி ஹதீஸைப் பார்ப்போம்:
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ''உங்களுக்கு முன்னிருந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்"" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?"" என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள், ''வேறு யாரை?"" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த வழிகேடுகளை எதிர்க்கும் டிரஸ்டிகள் சிலரும் உலமாக்கள் சிலரும் பெரும்பான்மை முடிவுக்கு முன்னால் தோல்வி காண்கிறார்கள். ஆனால், தொடர்ந்தும் வழிகேட்டை அமல்படுத்தும் டிரஸ்டி சபையிலும் வழிகேட்டை அனுமதிக்கும் உலமா சபையிலும் அங்கம் வகிக்கிறார்கள்.
செய்யப்படக் கூடிய பித்ஆக்களை அவ்வப்போது எதிர்க்கவாவது நாம் அங்கே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்து.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதையும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு முரணாகச் செயல்படுவதையுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இப்படிப்பட்ட சபைகளில் அங்கம் வகிக்கலாமா என்பது பற்றி அவர்கள் தீர்க்கமாகச் சிந்தித்து மீளாய்வு செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள். ஏனென்றால்,
அல்லாஹ் கூறுகிறான்:
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையோரெனில், அவர்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள்,; மூடர்கள் அவர்களுடன் (வேண்டாதவற்றைப்)பேச முற்பட்டால், ஸலாமுன் (சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி (அவர்களைவிட்டு விலகி)விடுவார்கள். (அல்-குர்ஆன் 25:63)
அல்லாஹ்வின் வேதத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அனுமதி கேட்கப்பட்டால் அனுமதி மறுக்கப்படுவதைப் பரவலாக அறிகிறோம்.
ஒரு குறிப்;பிட்ட ஜமாஅத்தினருக்கு மட்டும் நிபந்தனையற்ற அனுமதி நிரந்தரமாக இருக்கிறது.
தொழுது கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அடியார்களைப்பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் சத்தம் போட்டு தஃலீம் என்று பெயரிட்டு அறிவுக்குப் பொருந்தாத கதைகளை (கிஸ்ஸாக்கள்) வாசிக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய குர்ஆனை விளக்கமாகச் சொல்வதற்கும் பித்ஆக்களைக் களைவதற்காக அவற்றை இனம் காண்பதெப்படி என்று மக்களை அறிவுறுத்தல் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
டிரஸ்டி சபைகளில் அங்கம் வகிக்கக் கூடியவர்களின் தகுதியைப் பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனிலே இப்படிச் சொல்கிறான்:
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்-குர்ஆன் 9:18)
கவலைக்குரிய விடயம் இன்று பல பள்ளிகளில் டிரஸ்டிகளாக இருப்பவர்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இருக்கின்றனவா என்றால் அது சந்தேகத்திற்குரியது.
அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சுபவர்களாயிருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அல்-குர்ஆனை விளக்குவதற்காக இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே மக்களுக்குச் சொல்லுவதற்காகப் பிரசங்கம் செய்வதற்கு அனுமதி கேட்டால் மறுக்க மாட்டார்கள். ஆனால், அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்கள்,; சாக்குப் போக்குச் சொல்லி மறுத்து விடுகிறார்கள்.
ஸக்காத் கொடுக்கக் கூடியவர்தான் பள்ளிப் பரிபாலகர்களாயிருக்க வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகச் சொல்லியிருக்க அதை மறந்து ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்திலே இருந்தால் 40 நாள் 4 மாதம் என்று வெளிக்கிளம்பிச் சென்றால் அதுதான் தகைமையாகக் கொண்டு, கேவலம், திரைமறைவில் திட்டங்கள் தீட்டி மக்களை ஏமாற்றி டிரஸ்டிகளாக ஆகிறார்கள்.
பள்ளிப்பரிபாலன சபைகளிலே அங்கம் வகிக்கும் டிரஸ்டிகள் மேலே சொல்லப்பட்ட குர்ஆன் வசனத்துக்கு அடுத்த வசனத்திலே அல்லாஹ் எச்சரித்துக் கூறுவதை நினைவு கூரட்டும். அப்படி நினைவு கூர்ந்தால் அவர்கள் டிரஸ்டி என்ற பதவியில் இருந்துகொண்டு இந்தப் பெரும் அநியாயங்களைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும், சிறப்புற்ற அப்பள்ளியைப் பரிபாலனஞ் செய்வோரையும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங் கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிந்தோரைப் போன்று நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருசாராரும்) சமமாக மாட்டார்கள்,; மேலும், அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்-குர்ஆன் 9:19)
இந்த வசனம் இப்போதைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்வோரைக் குறித்துக் கூறப்பட்டதல்ல, அது அன்று கஃபதுல்லாஹ்வை நிருவாகம் செய்த காபிர்களைப் பார்த்துக் கூறப்பட்டது என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
அது அப்படியல்ல.
அல்லாஹ்வின் பள்ளிகளைப் பரிபாலிப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு விரோதமான செயல்பாடுகளைப் பள்ளிகளில் அனுமதித்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஆதரவாய் இருக்கும் எல்லாக் காலத்து டிரஸ்டிகளையும் அது குறிக்கும்.
பள்ளி டிரஸ்டிகளாய் இருப்பவர்களுக்கான தகுதிகளைக் குறிப்பிட்டுக் காட்டிய வசனத்தைத் தொடர்ந்து இந்த வசனம் அல்-குர்ஆனிலே இடம்பெற்றிருக்கின்றதென்றால் அதன் தாற்பரியம் உணரப்பட வேண்டும்.
ஆகவே, டிரஸ்டிகள் என்பவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து பிறழ்ந்து விடுவதிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள முயற்சி செய்வது அவர்களின் கடமை என்பதை உணர்வார்களாக.
அல்லாஹ் அல்-குர்ஆனிலே இன்னோர் இடத்தில் கூறுவதை இவர்களின் கவனத்திற்கு விடுவது உகந்தது. அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் அல்-குர்ஆனிலே இன்னோர் இடத்தில் கூறுவதை இவர்களின் கவனத்திற்கு விடுவது உகந்தது. அல்லாஹ் கூறுகிறான்:
இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாததைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய வழியிலேயே திருப்பிவிடுவோம்,; அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம், அது சென்றடையும் இடத்தில் மிகக் கெட்டது. (அல்-குர்ஆன் 4:115)
இப்படி அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருப்பது இந்தக் காலத்திலே பள்ளி நிருவாகிகளும், இஸ்லாமிய அறிஞர்களை(உலமாக்களை) வெளியாக்கும் அரபி மத்ரஸாக்களை நடத்துபவர்களும் மிகவும் கவனமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
பள்ளிகளின் பிரசங்க மேடைகள் மூலமாகத்தான் இன்று பித்ஆக்கள் சிலாகித்து பிரசாரம் செய்யப்படுகின்றன. குத்பா பிரசங்கம் செய்யக்கூடிய அறிஞர்களில் பலர் குத்பாவில் கேட்கக்கூடிய பிரார்த்தனையிலே, ''முஹம்மத்; நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் எங்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொள் யா அல்லாஹ்!"" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
பள்ளி நிருவாகிகள் ஆமீன் கூறுகிறார்கள்.
உலமா சபை அங்கத்தவர்களும் ஆமீன் கூறுகிறார்கள்!
இப்படிப்பட்ட நிருவாக சபைகளில் அங்கம் வகிக்கும், அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சும் அங்கத்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவுதான் மேலே சுட்டிக்காட்டிய அல்-குர்ஆன் 25:63வது வசனத்தின் மூலம் அல்லாஹ் இட்டிருக்கும் உத்தரவாக இருக்க முடியும்.
அப்படியல்ல, அதன் விளக்கம் வேறு விதமாகவுள்ளது என்று சொல்பவர்கள் அதைக் காரணங்களோடு விளக்கினால் நல்லது.
இறுதியாக, அல்லாஹ் விடுத்திருக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையை, அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு, எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?"" எனக் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்"" எனவும் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக"" எனவும் கூறுவார்கள். (அல்-குர்ஆன் 33:66-68)
ஆகவே, நாம் அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே, இன்ஷா அல்லாஹ், நாளை மறுமையிலே கைசேதப்பட்டுப் புலம்பும் கூட்டத்திலாகமலிருக்க ஒரு காரணியாக இருக்கும்.
வஆகிர் தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
Labels:
நிர்வாகிகள்,
பள்ளிவாசல்கள்,
புலம்பல்,
முத்தவல்லிகள்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment