Sunday, August 4, 2013
வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் ஆய்வு - விளக்கம் - 2
வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸை நாம் அரபு மூலத்துடன் பதிவு செய்து அவர்களின மொழி பெயர்ப்பில் எழும் கேள்விகளை முதலில் வைத்தோம். அங்கிருந்து கிடைக்கப்பெறும் பதில்கள் சரிதானா.... என்பதை வாசகர்கள் முடிவு செய்துக் கொள்ளட்டும்.
இனி தொடர்ந்து அடுத்தடுத்தக் கேள்விகள்.
இனி தொடர்ந்து அடுத்தடுத்தக் கேள்விகள்.
سنن ابن ماجه - كِتَاب الصِّيَامِ - فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا وأن يخرجوا إلى عيدهم من الغد حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ
கேள்வி 3) வாகனக் கூட்டம் பிறைப் பார்த்து நோன்பு வைத்ததாகவும் மறு பிறைப் பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியாமல் சட்டம் கேட்பதற்காக நபி(ஸல்) அவர்களிடம் வந்ததாகவும் இவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள். பிறைப் பார்த்து நோன்பு வைக்க தெரிந்தவர்களுக்கு பிறைப்பார்த்து நோன்பை விட தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை இந்த மொழி பெயர்ப்பின் வழியாக வைத்துள்ளார்கள். பிறைப் பார்த்து நோன்பை வைக்க அவர்களுக்கு தெரிந்தது ஆனால் பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியவில்லை என்பது சத்தியமான பார்வைத்தானா...என்பதை அவர்களே முடிவு செய்துக் கொள்ளட்டும்.
கேள்வி, வாகனக் கூட்டம் நோன்போடு வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
கேள்வி 4) அந்த ஹதீஸின் வாசகத்தில் ஒரு உண்மையுள்ளது. ஆனால் அது மொழி பெயர்ப்பில் மறைக்கப்பட்டுள்ளது. فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ வந்தவர்கள் பிறைப் பார்த்ததாக சாட்சி சொல்கிறார்கள். ஆனால் மொழி பெயர்ப்பில் "சாட்சி" என்ற வார்த்தையை எடுத்து விட்டு பிறைப் பார்த்தோம் என்று மட்டும் மொழி பெயர்த்துள்ளனர். மார்க்க விளக்கம் பெற வந்தவர்கள் "நாங்கள் பிறைப் பார்த்ததற்கு சாட்சி கூறுகிறோம்" என்று சாட்சியாளர்களாக ஆவார்களா..?
(நமது விளக்கம்: பிறைப் பார்த்து நோன்பு வைத்து பிறைப் பார்த்து நோன்பை விட்டு விட்டு வரும் வாகனக் கூட்டத்தார் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் நோன்பு வைத்துள்ளதைப் பார்த்து பிறைப் பிறந்து ஷவ்வால் துவங்கி விட்டது. அதற்கு நாங்கள் சாட்சி, நாங்கள் பிறைப் பார்த்து விட்டோம் என்றே கூறுகிறார்கள். அதனால் தான் சாட்சி கூறுவதாக கூறுகிறார்கள்)
கேள்வி 5) பிறைப் பார்த்து நோன்பை விட வேண்டும் என்ற சட்டம் தெரியாதவர்களுக்கு பிறைப் பார்க்க வேண்டும் என்ற சட்டம் மட்டும் எப்படித் தெரிந்தது?
கேள்வி 6) வாகனக் கூட்டத்திற்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்றால், நாளை தொழும் திடலுக்கு செல்லுமாறு ஹதீஸ் வாசகம்.
வந்துள்ளது. நேற்று புறப்பட்டு இன்று மாலை மதீனா வந்து சேர்ந்தவர்கள் இன்று மாலை புறப்பட்டு நாளை காலை அவர்களின் தொழும் திடலுக்கு சென்று சேர்ந்து விட முடியுமா..?
கேள்வி 7) வாகனக் கூட்டத்தின் பயண தொலைவு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இருக்கும் போது நாளை தொழும் திடலுக்கு செல்லுங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தால் அது பொருத்தமான கட்டளையா...? நபி(ஸல்) அவர்களுக்கு இது விளங்கவில்லையா..?
கேள்வி 8) விடிந்தால் நபி(ஸல்) அவர்களுக்கு பெருநாள் எனும் போது, வந்தவர்களை தங்க வைத்து தம்மோடு தொழும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாளை மறுநாள் வாகனக் கூட்டத்தார் செல்லும் தொலைவுக்கு அவர்களை போக சொல்லி இருப்பார்களா..?
கேள்வி 9) பிறைப் பார்த்து நோன்பை விடத் தெரியாமல் சட்டம் கேட்க அவர்கள் வந்திருந்தால் பெருநாள் தொழுகையின் சட்டங்களை அவர்கள் எவ்வாறு விளங்கி இருப்பார்கள்? நபி(ஸல்) பெருநாள் தொழுகையின் சட்டங்களை விளக்காமல் அனுப்பி விட்டார்களா...? விளக்கி இருந்தால் அதற்கான ஆதாரம் எங்கே?
"வந்தவர்களுக்கு கட்டளையிட்டார்கள்" என்று இவர்கள் அந்த ஹதீஸுக்கு கொடுக்கும் மொழிபெயர்ப்பில் விடையே கிடைக்காத இத்தகைய கேள்விகள் அடங்கியுள்ளன.
வாசகர்களே... இந்தக் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான - அறிவுப்பூர்வமான பதில் கிடைக்கின்றதா... என்று கவனித்து வாருங்கள். அப்போதுதான் இப்னு அப்பாஸ் - குரைப் சம்பவத்தைப் போன்று இந்த ஹதீஸையும் தவறாக மொழி பெயர்த்து பரப்பி வருகிறார்கள் என்ற உண்மையான விபரம் உங்களுக்கு புரியும்.
இந்த ஹதீஸில் வரும் "ஃப அமரஹும்" என்பதை எப்படி மொழிபெயர்த்துப் புரிந்துக் கொள்வது? இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நிலை என்னவென்பதை இனி பார்த்து விட்டு முஸ்லிமிலிருந்து அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
Labels:
வாகனக் கூட்டம்,
ஹதீஸ் ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment