Monday, July 1, 2013
அலங்கரிக்கப்படும் தர்காக்கள் (ஊர் நடப்பு)
'ஊர் நடப்பு' என்ற லேபிலில் ஊரில் நடக்கும் பல நிகழ்வுகளை நாம் இந்த இணையத்தில் அப்டேட் செய்து வந்துக் கொண்டிருக்கிறோம். பரங்கிப்பேட்டைக்கு வெளியில், வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்கள் நம்மூர் மக்களின் இஸ்லாமிய பற்றை தொடர்ந்து விளங்கி வர வேண்டும் என்பதே இந்த பதிவுகளின் நோக்கமாகும்.
பரங்கிப்பேட்டையில் இஸ்லாதிற்கு முரணான பல்வேறு நடப்புகள் இஸ்லாத்தின் பெயரால் நடப்பதற்கு ஜமாஅத்துல் உலமாவை சார்ந்த உலமா?க்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியும். ஏனெனில் அவர்கள் குழுமி நின்றே இக்காரியங்களை செய்கிறார்கள்.
தர்காக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அலங்கரிக்கப்படுகின்றன. படங்கள் கீழே.
கிளுர் நபி பள்ளிக்கு முன்னே இருந்த தர்கா பல ஆண்டுகளாக கேட்பாறற்று சிதைந்து போய் கிடந்தன. பாவத்தை சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டவர்கள் அந்த தர்காவில் ஓடு மாற்றி புதுபித்து கொடியேற்றி விழா கொண்டாடி விட்டார்கள். (அரைக்காசி பீவி தர்கா அலங்காரம் கீழே..)
அரைக்காசி பீ தர்காவின் சோடனைகளைப் பாருங்கள். உங்களில் எத்துனைப் பேருடைய மனம் இதற்காக கோபப்படுகின்றது. வருந்துகின்றது. உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சூழ்ந்து அறிகிறான்.
Labels:
அலங்காரம்,
தர்காக்கள்,
ஜமாஅத்துல் உலமா
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்






No comments:
Post a Comment