Saturday, April 27, 2013
பள்ளிவாசலா.. பாராட்டு அரங்கமா.. (ஊர் நடப்பு)
அஸ்ஸலாமு அலைக்கும்.
மதிப்பு மிகு முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு,
27-04-13 அன்று பரங்கிப்பேட்டை ஜாமிஆ மீராப்பள்ளியில் நடந்த ஜும்ஆவிற்கு பிறகு, விழுப்புரம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், நமது ஐக்கிய ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் சகோ. யூனுஸ் நானாவை பாராட்டி வாழ்த்து மடல் அளிக்கப்போவதாக அறிவிப்பு செய்து அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் நடப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை கடந்து இதை விட பெரிய கொடுமையான நிகழ்வு என்னவென்றால் பள்ளியில் வைத்து பாராட்டு பாடலை பாடியதோடு மட்டுமல்லாமல்,
"அல்லாஹ் சுவர்க்கத்தை கட்டி இழுத்து வந்து யூனுஸ்நானாவிற்காக நிறுத்தியுள்ளான்" என்று மடமையின் உச்சத்தில் நின்று உளறிக் கொட்டியுள்ளார்கள் பாராட்டுவதற்காக வந்தவர்கள்.. (குறிப்பு: நான் மீராபள்ளி ஜும்ஆவிற்கு செல்லவில்லை. இந்நிகழ்ச்சிப் பற்றி பலர் அலைப்பேசியில் கூறினார்கள். அவர்கள் அனைவருமே சுவர்கத்தை கட்டி இழுத்து வந்து நிறுத்தியதாக பேசியதை உறுதிப்படுத்தினர். பலர் சாட்சியளித்ததால் அதை இங்கு சுட்டிக் காட்டவேண்டிய நிலை ஏற்பட்டது)
எள்ளின் முனையளவு இஸ்லாமிய அறிவுள்ளவனும் இந்த கேவலமான உளறலை ஒத்துக்கொள்ள மாட்டான்.
இப்படி உளறிக் கொட்டியவர்களை அல்லாஹ் நாளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிற்க வைத்தால் இவர்களின் நிலைமை என்னவாகும்?
தனி மனித மதிப்பு எல்லையைக் கடக்கும் போது அது தனிமனித வழிபாடாக மாறி இத்தகைய கொடுமைகளையும், இதைவிடப் பெரிய கொடுமைகளையும் செய்யத் தூண்டி விடும் என்பதை நாம் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். அது இப்போது நடந்துள்ளது.
சகோ. யூனுஸ்நானா வியக்கத்தக்க சாதனைகளை புரிந்துள்ளார் என்றே வைத்துக் கொண்டாலும் அதற்காக சிலர் முன்னெடுக்கும் இத்தகைய நிலைப்பாடு அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுக் கொடுக்கவே வழிவகுக்கும்.
புகழுக்குரியவன் இறைவன் என்பது இஸ்லாத்தின் தலையான கொள்கையாகும். இதைப் புரிந்துக் கொள்ளாமல் மனிதர்கள் வரம்பு மீறி புகழப்படும் போதெல்லாம் அல்லாஹ் அவர்களை சபித்துள்ளான்.
வரம்பு மீறாதீர்கள், வரம்பு மீறாதீர்கள் என்ற எச்சரிக்கை குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் பள்ளி அந்த ரப்புல் ஆலமீனைப் பற்றி பேசுவதற்கும், அவனைப் பெருமைப்படுத்திப் புகழ்வதற்கும் உள்ள இடமாகும். அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் பாராட்டு விழா அரங்கங்கலல்ல.
மீராப்பள்ளியைப் பொருத்தவரை அதன் நிர்வாகிகள் இஸ்லாத்தை இன்னும் கற்க வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை விட வேறு சிலரின் திருப்திக்காக மெளலீது பாடல்களை தொடர்ந்து பள்ளியில் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலவற்றை அனுமதிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியே ஜும்ஆவில் நடந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களில் சிலரே முகம் சுழிக்காமல் எழுந்து சென்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் நொந்துக் கொண்டு சென்றதோடு வெளியில் புலம்பியுள்ளார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியில் வந்து புலம்பி நிற்பதை விட உடனுக்குடன் சுட்டிக் காட்டப்பட்டால் அடுத்து இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்கப்படும்
இத்தகைய நிகழ்ச்சிகளை பள்ளிவாசல்களில் நடத்துவது ஒரு ஆரோக்கியமான முஸ்லிம் சமுதாயத்திற்கு உகந்ததல்ல என்பதை இந்த ஊர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(முக்கியக் குறிப்பு: குர்ஆன் ஹதீஸை விளங்கியக் கொள்கைவாதிகளே... உங்கள் மெளனம் இத்துனை எத்துனைக் காலத்திற்கு.....!)
(முக்கியக் குறிப்பு: குர்ஆன் ஹதீஸை விளங்கியக் கொள்கைவாதிகளே... உங்கள் மெளனம் இத்துனை எத்துனைக் காலத்திற்கு.....!)
Labels:
சுவரக்கம்,
பாராட்டு,
மீராப்பள்ளி,
யூனுஸ்,
வரம்பு மீறல்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசம்பவம் ”உன்மையாக” இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளை வன்மையாக கண்டிக்கிறது.
ஒருவருக்கு சொர்க்கம் - நரகம் என்று தீர்மானிப்பது அல்லாஹ்வின் கையில்...
நவூதுபில்லாஹ்!
(அதே சமயம் மேற்கண்ட கருத்திற்கு (வாசகத்திற்கு) சம்மந்தப்பட்டவர்கள் ஆதராத்துடன் மறுப்பு அளித்தால் நம்முடைய கண்டனத்தை திரும்ப பெறுவோம் என்று கூறிகொள்கின்றோம்)
இந்த புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டவரும், அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் மீண்டும் ஒரு முறை கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைய வேண்டும். போட்டோவில் இருப்பவர்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. அல்லாஹ்வின் சாபத்திற்கு இவர்கள் அஞ்ச வேண்டும்.
Deleteஅச்தக்பிருல்லாஹ்
ReplyDeleteஇன்தெ செயல் உண்மையாகெ இருப்பின்......
பரங்கிபேட்டை எங்கே போய்கொண்டு இருக்கு
முஹம்மது நூர்
குவைத்
நவுதுபில்லாஹ்!
ReplyDeleteஇது கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டிய விஷயம். மீராப்பள்ளி நிர்வாகம் இது போன்ற அனாச்சாரங்கள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது .
அதுமட்டும் அல்லாமல், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கின்றது. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்க கூடிய பாடல் வரிகள் நிறைந்த மௌலது என்ற ஷிர்க்கை இனிமேலும் இந்த நிர்வாகம் அனுமதிக்க கூடாது.
மதிப்பிற்குரிய நிர்வாகிகளே! இஸ்லாத்திலிருந்து உங்களை வெளியேற்றக்கூடிய இத்தகைய செயல்களிருந்து விலகி கொள்ளுங்கள் "நீங்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்".
وسيق الذين التقوا ربهم الي الجنة زمرا
ReplyDeleteஇந்த புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டவரும், அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் மேண்டும் ஒரு முறை கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைய வேண்டும். போட்டோவில் இருப்பவர்களை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. அல்லாஹ்வின் சாபத்திற்கு இவர்கள் அஞ்ச வேண்டும்.
ReplyDelete