Sunday, April 14, 2013

இஸ்லாத்தை ஏற்ற பாடகி!

பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்
 
தியாம்ஸ் என்றழைக்கப்படும் மெலனி ஜார்ஜியடெஸ் (Mélanie Georgiades, known as Diam’s) பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சுமார் மூன்று வருடங்களாக தமது இசை நிகழ்ச்சிகளை விட்டு ஒதுங்கிக்காணப்பட்ட அவர் என்ன செய்கிறார் என்ற ஏக்கமும் ஆவலும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியை கொடுத்தார்.
 
 
TF1 என்ற தனியார் தொலைக்காட்சியில் பர்தாவுடன் தோன்றிய அவர் தாம் இஸ்லாத்தினை பரிப்பூர்ணமாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை பிரென்ஞ் அரசு தடை செய்தாலும் அதற்கு மாற்றமான விளைவுகளையே அது சந்தித்துவருவதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.
 
தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சவுகர்யமாகவும் அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்று பதிலளித்தார்.
 
இஸ்லாத்தினை நன்கு உணர்ந்த பிறகும் புனித குர்ஆனை நன்கு படித்த பின்புமே முழுமனதுடன் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தற்போது நான் ஏன் வாழ்கிறேன் எதற்காக பூமியில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன் என்றும் கூறினார்.
 
என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் தாம் தொழுகைக்கு செல்வதாக கூறினார் அப்போது தாமும் வருவதாக கூறி தொழுகைக்கு சென்றேன். அப்போது என் வாழ்நாளில் முதல் முதலாக என்னுடைய தலையை தரையில் பதித்தேன். அப்போது தமக்கு ஏற்பட்ட உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பதை உணர்ந்தேன். அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது என்பதனையும் உணர்ந்தேன் என்றும் கூறினார்.
 
ஒரு சம்பவம்
 
அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.
 
தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!
 
பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?
 
சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.
 
அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.
 
“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.
இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.  அரபு நாட்டுக் காசாளப் பெண்  அதிர்ச்சியில்
உறைந்து போனாள்!
 
தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!
அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:
 
“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”
 
அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:
“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”
 
பிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.

இந்த பேறு பெற்ற பெண்மணி அழகாக கூறுகின்றார் ”என்னை யாரும் மிரட்டி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை… மாற்றவும் முடியாது.”
 

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks