Sunday, April 21, 2013
பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமாவின் பதிலுக்காக...
அஸ்ஸலாமு அலைக்கும்.
பரங்கிப்பேட்டையில் கோடைக்கால தீனியாத் பயிற்சி வகுப்புகள் ஆண்டு தோரும் நடப்பது போன்று இந்த வருடமும் துவங்கி விட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும், அல்ஹஸனாத் அரபிக் கல்லூரியிலும் ஆண்டுதோரும் பயிற்சி வகுப்புகள் நடைப்பெறும். சில வருடங்களாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமாவும் கோடைக்கால தீனியாத் வகுப்புகளை நடத்துகின்றன.
தீனியாத் பயிற்சி தேவையான ஒன்றுதான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நகர ஜமாஅத்துல் உலமா வெளியிட்டுள்ள நோட்டிஸ், இந்தக் கட்டுரையை எழுத நம்மைத் தூண்டி விட்டது.
நோட்டிஸைப் படியுங்கள்.
குழப்பமில்லாத தூய இஸ்லாத்தை கற்றுக் கொள்ள என்று நோட்டிஸில் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் சொல்வது குழப்பமில்லாத இஸ்லாம் என்றால் குழப்பமான இஸ்லாம் என்று எதைக்குறிப்பிடுகிறார்கள்?
பரங்கிப்பேட்டையில் அப்பாபள்ளியிலும், கோட்டாத்தங்கரைத் தெரு தவ்ஹீத் மர்கஸிலும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாம் என்ற கொள்கை பிரச்சாரம் நடைப்பெறுகின்றது. அடுத்து எப்போதும் நடக்கும் தப்லீக் கூட்டங்கள். அவ்வளவுதான்.
இதில் எதை குழப்பமான இஸ்லாம் என்று ஜமாஅத்துல் உலமா குறிப்பிடுகின்றது என்பதை பகிரங்கமாக சொல்ல முடியுமா?
அகீதா, மஸாயில் என்று இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் தப்பும் தவறுமாக விளங்கி இருக்கக் கூடிய உலமாக்கள் பிடிவாதமாக அதிலேயே நிலைத்திருக்கக் கூடிய உலமாக்கள் எப்படி குழப்பமில்லாத இஸ்லாத்தை சொல்வார்கள்?
இவர்கள் விளங்கி வைத்துள்ள இஸ்லாம் என்ன?
கப்ருகளில் போய் ஸஜ்தா செய்யலாம்,
கொடி ஏற்றலாம்,
சந்தனம் பூசலாம்,
கப்ரைக் கட்டிக்கொண்டு அழலாம்,
உண்டியல் வைத்து வசூல் பண்ணலாம்,
கப்ரில் உள்ளவர்களை குஷி படுத்த ஆடல் பாடல் பாட்டு கச்சேரி நடத்தலாம், பேய் பிசாசு என்று மக்களை ஏமாற்றி தட்டு தாயத்தை விற்று லட்சங்களை சம்பாதிக்கலாம்,
அல்லாஹ்வின் பள்ளிகளிலேயே கவிதைகளைப் பாடி அசத்தலாம்....
இது போன்ற கேடுகெட்டவற்றை இஸ்லாத்தின் பெயரால் சொல்பவர்கள் நகர ஜமாஅத்துல் உலமாவின் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்கள். இவர்கள் நடத்தும் தீனியாத் வகுப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தீனியாத் வகுப்பில் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்களே.. என்று சிலருக்குத் தோன்றலாம்.
தர்காக்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தர்காக்களை புதுப்பித்துக் கட்ட வேண்டும் என்று கூட்டம் போட்டு பேசுபவர்கள் இடம் பெற்றுள்ள உலமா சபையில் எப்படியும் அந்த நச்சுக் கருத்துக்களை சீரார்களின் உள்ளங்களில் விதைக்கத்தான் செய்வார்கள்.
உண்மையிலேயே குழப்பமில்லாத தெளிவான இஸ்லாத்தை இவர்கள் சொல்வது உண்மையென்றால் இளைஞர்களுக்கான தீனியாத் வகுப்பை இவர்கள் நடத்தட்டும். இளைஞர்களின் கேள்விகளை எதிர்கொண்டு குழப்பமில்லாத இஸ்லாத்தை அவர்களுக்கு போதிக்கட்டும். உலமாக்கள் சபை தயாராகுமா...?
இவர்கள் இளைஞர்களை கண்டுக்கொள்ளாமல் சீரார்களை குறிவைத்துள்ளார்கள். அந்த பிஞ்சு உள்ளங்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இன்றைக்கு தீனியாத் பயிற்சியின் முதல் நாள். சீரார்கள் நிறைந்திருந்தார்கள்.
இன்றைக்குதான் நாகூர் தர்காவில் சந்தனம் பூசுதல் என்ற சாபத்திற்குரிய விழா.
இன்றைக்குதான் பரங்கிப்பேட்டையிலும் நாகூர் என்ற பெயர் தாங்கிய தர்காவில் அதே நிகழ்ச்சி. தர்கா அலங்கரிக்கப்பட்டு ஜோராக பாட்டு முழக்கமெல்லாம் நடந்தன.
குறைந்தது. இது குறித்து முதல் வகுப்பில் இந்த உலமாக்கள் (அதாவது இவையெல்லாம் தவறு என்று உணர்ந்த - விளங்கிய உலமாக்கள் ஓரிருவர் இருக்கிறார்கள் அவர்களை குறிப்பிடுகிறோம்) இதை தவறு என்று அந்த குழந்தைகளிடம் சுட்டிக் காட்டி இருப்பார்களா..?
மீரா பள்ளி.... ஊருக்கு பொதுவான பள்ளி, அனைவரும் விரும்பக் கூடிய பள்ளி, அந்தப் பள்ளியில் தீனியாத் வகுப்பிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நன்மையில் உதவுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இடம் கொடுத்திருக்கலாம். நாமும் அதை சரிகாண்போம். இதே போன்று குர்ஆன் சுன்னா கொள்கை சகோதரர்கள் தீனியாத் பயிற்சி வகுப்புக்கு இடம் கேட்டாலும் மீராபள்ளி நிர்வாகம் கொடுக்க வேண்டும். மறுக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.
நோட்டிஸில் "சங்கை மிக்க உலமாக்களில் சீரிய சொற்பொழிவு" என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது சீரிய சொற்பொழிவா இல்லையா என்பதை ஒரு பக்கம் வைப்போம். சங்கை மிக்க உலமாக்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளலாமா..?
உங்களை நீங்களே பரிசுத்தவான்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது.
சிந்திக்கத் தெரிந்தவர்களே.... சிந்தியுங்கள்.
***********************************
இந்த ஆக்கத்திற்கு அனானிமச்சாக ஒரு கமண்ட் வந்துள்ளது. அதற்கான பதில் இங்கே.
ஸலாம்.
சகோ. அப்துஸ்ஸமதின் குடும்பத்தார், பரங்கிப்பேட்டை மக்கள் குர்ஆனை ஓத வேண்டும், மனனம் செய்ய வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த ஒன்று.
ஜமாஅததுல் உலமா துவங்குவதற்கு முன்பிருந்தே அந்தக் குடும்பத்தாலர் குர்ஆனுக்காக உழைக்கிறார்கள். அந்தக் குடும்பத்திற்கு அல்லாஹ் மகத்தான் கூலி வழங்க போதுமானவன்.
அப்துஸ்ஸமதின் குடும்ப முயற்சியை ஜமாஅத்துல் உலாமாவின் முயற்சியோடு ஒப்பிடாதீர்கள்.
தர்கா வழிபாட்டை சரிகாண்பவர், அதை நிலை நிறுத்தப் பாடுபடுபவர் ஜமாஅத்துல் உலமாவின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
***தர்கா ஒருங்கிணைப்பு எப்போது நடந்தது*** என்று கேட்கிறீர்கள். பள்ளிவாசல்களின் ஒருங்கிணைப்புக்கு முன்பே ஷிர்க் என்ற கொடிய பாவம் மிக்க மகிழ்ச்சியுடன் அரங்கேறும் தர்காக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்து. தர்காக்கள் ஒருங்கிணைப்புப் பேரவைக்காக சிலர் வேலை செய்கிறார்கள்.
இது பற்றி சகோ. கலீல் பாகவிக்கு நான் வைத்த ஒரு பதிவை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்தப் பதிவு 10-05-2012ல் குழுமத்தில் பதிக்கப்பட்டதாகும். இதற்கு அந்த சகோதரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை
அன்றைக்கு தர்காக்கள் ஒருங்கிணைப்புக்குத் தலைமைத் தாங்கியவர்தான் ஜமாஅத்துல் உலமாவின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவரை சரி கண்டு, இவர் தலைமையில் ஒன்று கூடும் மற்ற உலமாக்களை எந்த லிஸ்டில் நீங்கள் வைப்பீர்கள்?
யாரிடம் இரட்டை வேடம் இருக்கின்றது என்பது உங்களுக்குப் புரியவில்லையா...
தர்கா, தாயத்து, தட்டு, மீலாது, கொடி, உண்டி, மயில் விளக்குமாறு, சந்தனம், ஆடல், பாடல், கவிதைகள் இவை எல்லாம் மார்க்கத்தில் கூடும் என்று பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா பகிரங்கமாக அறிவித்து விட்டு அந்த தலைமையில் ஒன்றுபட்டால் அங்கு இரட்டை வேடம் இல்லை எனலாம். இதை ஜமாஅத்துல் உலமா அறிவிக்குமா?
முதலில் ஜமாஅத்துல் உலமாவின் நிலைப்பாடு என்னவென்பதை பகிரங்கப்படுத்த சொல்லுங்கள்.
என்னிடம் இரட்டை வேடமும், காழ்புணர்ச்சியும் இருந்தால் அதை மக்களுக்கு வேண்டுமானால் நான் மறைத்து விடலாம் ரப்புல் ஆலமீனிடம் மறைக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்க.
உண்மையை பேசவும், உண்மையை அறியவும் முயற்சிக்கும் நீங்கள் சொந்தப் பெயரில் எழுதலாமே.... அடையாளமில்லாவராக ஏன் உங்களை ஆக்கிக் கொள்கிறீர்கள்?

Labels:
உலமா,
தீனியாத்,
மீராப்பள்ளி,
வகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

சகோ சமதின் உழைப்பையும் நாங்கள் அறிவோம்.. உங்களின் இரட்டை வேடத்தையும் நாஙகள் நன்கு அறிவோம்... சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தர்கா வழிபாட்டையும் குர்ஆன் பயற்ச்சியை தொடர்பு படுத்தி மக்களை குழப்ப வேன்டாம்... பள்ளிவாசல்கள் ஒருங்கினைப்பு அறிந்தோம்.. அது எப்போ தர்கா ஒருங்கினைப்பு நடந்தது.... உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்க் கொன்டிருக்கிறது....
ReplyDeleteஇந்த ஆளுக்கு இதே வேளைதான் போங்க...
ReplyDeleteமொதல்ல தவ்ஹீத்ன்னு சொல்லி பல குரூப்பா ஆனவங்கள ஒன்னா ஆக்கட்டும் பாக்கலாம்.
தனக்குள் ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் கொறய நோண்டி பாக்குறதே இவருக்கு வேலையா போச்சு
ஸலாம்
ReplyDeleteகமண்ட்டுக்கான பதில் கட்டுரை இறுதியில் இடம் பெற்றுள்ளது.