Monday, May 6, 2013

"ரா" காக்கும் ராத்திபு மேடை (ஊர் நடப்பு)


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஷெய்த்தானின் சூழ்ச்சியால் தமாஷாக பொழுதுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நமக்குள்ள பொறுப்புகளையும் ஷெய்த்தான் மறக்கடித்துக் கொண்டிருக்கிறான்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்கத்திற்கு முரணான காரியம் ஏதாகிலும் நடந்தால் கொள்கைவாதிகள், தவ்ஹீத்வாதிகள் வந்து கேட்பார்கள் என்ற நிலை இருந்தது.  ஷிர்க், பித்அத் ஓரளவு ஒடுங்கி, ஓய்ந்துப் போயிருந்த காலகட்டம் அது. பள்ளிவாசல் இமாம்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்து பார்த்து பக்குவமாக பேசினார்கள். உளறிக் கொட்டினால் தவ்ஹீத்வாதிகள், வஹ்ஹாபிகள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் உள்ளத்தில் உறைந்திருந்தன.
இன்றைக்கு நிலைமை வேறு.
தர்காக்களில் தாண்டவமாடும் கொடிய ஷிர்க்கும், இஸ்லாம் வெறுக்கும் காரியங்களும்,  பள்ளிவாசல்களில் கொடிகட்டி பறக்கும் மார்க்கத்திற்கு முரணானவையும் கொள்கைவாதிகளை எவ்வித சலனமும் செய்யவில்லை.
விளைவு.  சாமியார் மடம் போல மாறி வருகின்றது. ராத்திபு மேடை.  வீட்டுக்குள் வைத்து புரோகித வியாபாரம் செய்துக் கொண்டிருந்தவர் ராத்திபு மேடையை வசப்படுத்தி வருமானத்தை விரிவுபடுத்திக் கொண்டு செல்கிறார்.
வாசலில் கொட்டகை, உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியில் தெரியாமலிருக்க சுற்றிலும் மரப்பு கட்டி.....ஓஹோவென்று வளர்ந்து வருகிறார்.
உள்ளுர் மக்களின் ஆதரவு குறைந்திருந்தாலும் ஆன்மீக மந்திரம என்று நம்பி வெளியூறிலிருந்து வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.  இதை இப்படியே விட்டால் ஆலமரமாக இந்த தீமை பரவி வெளியூர் மக்களின் வருகை கூடி கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது என்று நிரூபித்து விட்டு அவர்கள் தங்கள் காரியத்தை வேண்டுமானால் தொடரட்டும்.
மார்க்கம் சொல்ல கிளம்பியுள்ள ஜமாஅத்துல் உலமாவிற்கு இதுவெல்லாம் தீமை என்று விளங்கவில்லையா...விளங்கியே இந்த மதவியாபாரத்திற்கு துணைப்போகிறார்களா...?
நேற்றைய காட்சி,
 
நோயால் தாக்கப்பட்ட ஒரு மாற்றுமதத்தவர் மினிவேனில் இந்த மந்திரவாதியிடம் கொண்டு வரப்பட்டுள்ளதை படத்தில் பாருங்கள்.
அன்புச் சகோதரர்களே.... எல்லா மதங்களிலும் மாந்திரீகம், ஜோஷியம், இருப்பது போன்று இஸ்லாத்திலும் இருக்கின்றது என்ற நம்பிக்கையை மாற்றுமதத்திவர்களின் மனங்களில் பதித்து இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கைக்கு பல ஆண்டுகளாக வேட்டுவைத்துக் கொண்டிருக்கும் இந்த அவலம் ஒழியும் நாள் எப்போது?
 

3 comments:

  1. மிகவும் நேர்தியான கருத்துக்கள்
    இதற்கு மிக விரைவில் ஆக்ஷ்ன் எடுக்கனும்
    மனதுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது

    ReplyDelete
  2. முதலில் நீங்கள் ஒன்று சேர பாருங்கள். பிறகு பிறரை பற்றி பேசலாம்.

    ஒரே கொள்கை அப்படின்னு சொல்லிக்கிட்டு இப்படி பிரிந்து கிடக்கும் தங்களுக்கு பிறரை பற்றி குறை கூறுவதற்கு கொஞ்சம்கூட அருகதை கிடையாது.

    TNTJ, JAQH, INTJ, TMMK பற்றி சொல்லிப் பாருங்களேன் அப்ப தெரியும் உங்கள் நிலைமை?

    பிறரைப் பற்றி குறை கூறும் தங்களின் கடைசி செய்தியாக இதுவே இருக்கட்டும்.

    முதலில் நீங்கள் திருந்துங்கள் பிறகு பிறரை திருத்துங்கள்.

    ReplyDelete
  3. kolkai vaathikalin otrumayinmayin vilaivum sunnath jamaathin otrumayum

    thaan raathib medyin alappariya valarchi.




    ReplyDelete

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks