Wednesday, June 26, 2013
வாத்தியாபள்ளி ஜும்ஆ - பட்டமளிப்பு - முஹல்லாவாசிகள் (ஊர் நடப்பு)
ஜாமிஆ வாத்தியாப்பள்ளி முஹல்லா
பரங்கிப்பேட்டையில் தனித்து ஒரு பள்ளியில் நடந்து வந்த ஜும்ஆ இன்றைக்கு 7 பள்ளிகளில் நடந்து வருகின்றன. இதில் கடைசியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ ஆரம்பித்தார்கள்.
மற்றப் பள்ளிகளில் ஜும்ஆ ஆரம்பித்ததற்கும் வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ ஆரம்பித்ததற்கும் வித்தியாசம் உண்டு. அப்பாபள்ளியை பொருத்தவரை அது கடந்த பல வருடங்களாக இஸ்லாமிய அடிப்படையான குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு நடந்து வரும் பள்ளியாகும். அங்கு ஜும்ஆ ஆரம்பிப்பதில் எந்த இடையூறும் இருக்கவில்லை. குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஜும்ஆ நடக்கும் என்று தெளிவாக அறிவித்து அங்கு ஜும்ஆ துவங்கப்பட்டது.
பெருவாரியான இளைஞர்களை ஈர்த்துள்ள அப்பாப்பள்ளி ஜும்ஆவின் தாக்கமும், கொள்கை அடிப்படையில் கடந்த பல வருடங்களாக இயங்கி வரும் தவ்ஹீத் மர்கஸின் ஜும்ஆ தாக்கமும் இளைஞர்களை தீவிரமாக சிந்திக்க வைத்து அடுத்து வரும் பள்ளிகளிலும் இதே அடிப்படையில் தான் ஜும்ஆ நடக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது.
இந்த உத்வேக எழுச்சியின் போதுதான் வாத்தியாப்பள்ளியின் ஜும்ஆ அறிவிப்பு வருகின்றது. குர்ஆன் நபிவழி ஜும்ஆவால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், குறிப்பாக வாத்தியாப்பள்ளி முஹல்லாவாசிகள். "அப்பாபள்ளி ஜும்ஆ போன்று ஜும்ஆ துவங்கப்பட வேண்டும்" என்று குரல் எழுப்புகிறார்கள்.
கொள்கைப் பற்றிப் பேசினாலே வயிற்றெரிச்சலுக்கு ஆட்படும் கூட்டம் இதை எதிர்க்கின்றது. ஊர் நடப்பு அடிப்படையில்தான் ஜும்ஆ நடக்கும் என்று காய் நகர்த்தத் துவங்குகிறார்கள். இதை அறிந்த கொள்கைவாதிகள் குறிப்பாக முஹல்லாவாசிகள் ஜும்ஆவில் ஒரே பாங்கு, மேடையின் மீதே பிரச்சாரம் நடக்க வேண்டும் என்று கையெழுத்து திரட்டி நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்கள். பிரச்சனை வலுத்ததால் அறிவிக்கப்பட்ட ஜும்ஆ ஒத்தி வைக்கப்படுகின்றது.
ஜும்ஆ எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் ஊர் குழுமங்களில் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. பெருவாரியான சகோதரர்கள் சுன்னா அடிப்படையில் தான் ஜும்ஆ நடக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிகிறார்கள்.
ஜும்ஆவில் இரண்டு பாங்கு சொல்வது சுன்னத்தல்ல. கீழே நின்று தமிழில் பிரச்சாரம் செய்வது சுன்னத்தல்ல என்பதற்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன.
அந்தக் கருத்தாடல்கள் இதோ:
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*
வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ அவசியமா? என்று சகோதரர் கலீல் பாகவி ஒரு தலைப்பைத் துவங்குகிறார்.
ஒரு நாளைக்கு 5 வேலை தொழுகை கடமை போலவே ஜும்மா தொழுகையும்,எப்படி ஐவேளை தொழுகை ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் நடைபெறுகிறதோ அதுபோலவே ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் நபிவழி படி ஜும்மா ஆரம்பித்தாலும் நன்றே கலீல் பாய். (பைஸல்)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டன என்று எந்த ஒரு ஆலிமும் எந்த ஒரு மௌலவியும், எந்த ஒரு ஹதீசையும் எடுத்துக் காட்ட முடியாது. மாறாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பர் மீது ஏறும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு தான் நடைமுறையில் இருந்தது.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜும்மா நாளின் முதல்பாங்கு இமாம் சொற்பொழிவுமேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது "ஸவ்ரா' எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள். நூல்: புகாரி 915 - 916
باب المؤذن الواحد يوم الجمعة
باب المؤذن الواحد يوم الجمعة
871 حدثنا أبو نعيم قال حدثنا عبد العزيز بن أبي سلمة الماجشون عن الزهري عن السائب بن يزيد أن الذي زاد التأذين الثالث يوم الجمعة عثمان بن عفان رضي الله عنه حين كثر أهل المدينة ولم يكن للنبي صلى الله عليه وسلم مؤذن غير واحد وكان التأذين يوم الجمعة حين يجلس الإمام يعني على المنبر باب الأذان يوم الجمعة
870 حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب عن الزهري عن السائب بن يزيد قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلما كان عثمان رضي الله عنه وكثر الناس زاد النداء الثالث على الزوراء قال أبو عبد الله الزوراء موضع بالسوق بالمدينة
இந்த இரண்டு ஹதீஸ்களையும் மொழி பெயர்க்க சொல்லுங்கள். உதுமான் ரலி இரண்டாவது பாங்கை உருவாக்கினார்கள் என்பது பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கல்ல என்பது விளங்கும்.
உதுமான் ரலி அதிகப்படுத்தியது் ஸவ்ரா என்றக் கடைத்தெருவில் "ஜும்ஆ நேரம் வந்து விட்டது" என்ற அறிவிப்பைத்தான். அது கடைத்தெருவில் அறிவிக்கப்பட்டதாகவே இமாம் புகாரியும் ஷாபி இமாமும் கூறுகிறார்கள்.
இந்த அறிவிப்பை மார்க்க இபாதத்திற்குரிய பாங்கு என்று சிலர் தவறாக விளங்கியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் வழிமுறை? அபூபக்கர் சித்திக், உமர் போன்ற பெரும் சஹாபாக்களின் வழிமுறைக்கு மாற்றமான ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்தும் துணிவு உதுமான் ரலி அவர்களுக்கு இருந்திருக்காது. அதே சமயம் மக்கள் வியாபாரத்தில் மூழ்கி ஜும்ஆ நேரத்தை மறந்து விடக் கூடாது என்பதை நினைவூட்டுவதற்காகவே கடைத்தெருவில் அறிவிப்பு செய்கிறார்கள்.
எனவே ஜும்ஆ தினத்தில் இமாம் மேடையில் உட்கார்ந்த பிறகு சொல்லப்படும் ஒரு பாங்கே மார்க்கத்திற்கு உட்பட்ட பாங்காகும். அது பரங்கிப்பேட்டையில் ஜாமிஆ அப்பாபள்ளியிலும், மர்கஸிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அல்லாஹ் நாடி இதே நடைமுறை வாத்தியாப்பள்ளியிலும் வரவேண்டும்.
அல்லாஹ்வின் பள்ளிகளிலிருந்து மார்க்கம் எச்சரிக்கும் பித்அத்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் இதற்காக முயற்சிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் கொடுக்கட்டும். (ஜி என்)
உதுமான் ரலி அதிகப்படுத்தியது் ஸவ்ரா என்றக் கடைத்தெருவில் "ஜும்ஆ நேரம் வந்து விட்டது" என்ற அறிவிப்பைத்தான். அது கடைத்தெருவில் அறிவிக்கப்பட்டதாகவே இமாம் புகாரியும் ஷாபி இமாமும் கூறுகிறார்கள்.
இந்த அறிவிப்பை மார்க்க இபாதத்திற்குரிய பாங்கு என்று சிலர் தவறாக விளங்கியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் வழிமுறை? அபூபக்கர் சித்திக், உமர் போன்ற பெரும் சஹாபாக்களின் வழிமுறைக்கு மாற்றமான ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்தும் துணிவு உதுமான் ரலி அவர்களுக்கு இருந்திருக்காது. அதே சமயம் மக்கள் வியாபாரத்தில் மூழ்கி ஜும்ஆ நேரத்தை மறந்து விடக் கூடாது என்பதை நினைவூட்டுவதற்காகவே கடைத்தெருவில் அறிவிப்பு செய்கிறார்கள்.
எனவே ஜும்ஆ தினத்தில் இமாம் மேடையில் உட்கார்ந்த பிறகு சொல்லப்படும் ஒரு பாங்கே மார்க்கத்திற்கு உட்பட்ட பாங்காகும். அது பரங்கிப்பேட்டையில் ஜாமிஆ அப்பாபள்ளியிலும், மர்கஸிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அல்லாஹ் நாடி இதே நடைமுறை வாத்தியாப்பள்ளியிலும் வரவேண்டும்.
அல்லாஹ்வின் பள்ளிகளிலிருந்து மார்க்கம் எச்சரிக்கும் பித்அத்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் இதற்காக முயற்சிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் கொடுக்கட்டும். (ஜி என்)
ஸலாம்,
வாத்தியாப்பள்ளியின் கட்டுமான பணி ஆரம்பிக்கும் போதே ஜும் ஆ பள்ளியாகத்தான் கட்டுகிறார்கள் என்ற தகவல் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இப்போது,
வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ அவசியமா?
என்று புதிதாக ஒரு குழப்பத்தை ஆரம்பித்து வைத்ததன் மர்மம் என்னவென்று புரியவில்லை. வாத்தியாப்பள்ளியில் ஜும் ஆ வேன்டுமா வேண்டாமா என்று அந்த முஹல்லா வாசிகள் தீர்மானிப்பதே சரியானது. அவர்களுக்கு தேவை இல்லை என்று நாம் குவைத்திலோ, துபாயிலோ, அமீரகத்திலோ உட்கார்ந்து கருத்து சொல்வது சரியாகத் தெரியவில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் ஜும் ஆ வேண்டாம் என்று சொல்பவர்கள் தொடர்ந்து வைக்கக் கூடிய ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய வாதம் “வாரத்திற்கு ஒரு முறையேனும் நண்பர்களோடு அளவலாவிக் கொண்டிருந்தோம். அது எத்தனை சந்தோஷமாக இருந்தது? அந்த சந்தோஷம் இப்போது கிடைக்கிறதா?” என்பது.
இன்றைய, நவீன தகவல் தொழில் நுட்பம் புரட்சி செய்து கொண்டிருக்கும் உலகிலே, ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். Mobile phone, Internet, Internet Calling Cards, gtalk, skype, WeChat, Viber, etc… இவைகளோடு உலவிக் கொண்டிருக்கும் நாம் நண்பர்களை வாரம் ஒரு முறைதான் சந்திக்க முடிந்தது என்று சொல்வது அபத்தம். உள்ளூரில் 10 பைசா செலவில் உங்கள் நண்பருடன் நிணைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. குவைத்தில் இருந்தும், துபாயில் இருந்தும், சவூதியில் இருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் Video Chat பண்ணி நண்பர்களுடன் குடும்பத்தாருடன் மணிக்கணக்கில் பேசி மகிழும் இந்த காலத்தில், ஜும் ஆவிலோ அல்லது தாவத்திலோதான் நண்பர்களை வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரண்டு முறையோ சந்திக்க முடிகிறது என்பது.... நகைப்பிற்குரியது. மனது வைத்தால் 10 நிமிடத்தில் எந்த ஒரு உள்ளூர் நண்பரையும் நேரில் சந்தித்து விட முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் ஜும் ஆ தொழுதுவிட்டு அல்லாஹ்வின் அருளை சுமந்து கொண்டு வெளியில் வந்து, நண்பர்களை சந்தித்து ஊர் புறம் பேசி அங்கேயே அல்லாஹ்வின் அருளை விட்டுவிட்டு வெறும் ஆளாக அல்லது பாவத்தினை சுமந்தவர்களாக வீட்டுக்கு போவதைக் காட்டிலும், அங்கே நண்பர்களை சந்திக்காமல் இருப்பதே மேல்!
வாதம் பிரதிவாதம் எல்லாம் உண்மையை கண்டறியும் நோக்கத்தோடு இருந்தால் மட்டுமே அதனால் பயன் உண்டு. தவறாக இருந்தாலும் வாதத்தில் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் அதனால், பிரதிவாதிக்கு எந்த நஷ்டமும் இல்லை. நாம்தான் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய வாய்ப்பினை இழந்து விடுகிறோம்.
ஒரு விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடத்தில் நேரடியான ஆதாரம் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அதற்கு அடுத்தபடியான ஆதாரங்களை அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), etc… எடுப்பது நன்மை. அதை விடுத்து உஸ்மான் (ரலி) இப்படி செய்தார்களே! அவர்களை நிராகரிக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பினால், உஸ்மான் (ரலி) அவர்களை பின்பற்றிக் கொண்டு, நபிகள் நாயகம் செய்து காட்டியதை புறக்கணிக்கலாமா? என்ற கேள்வியினை பிரதிவாதி கேட்பார். இப்படியாக விவாதம் மட்டும்தான் மிஞ்சுமே தவிர எந்த பலனும் இல்லை.
உமர் (ரலி), உஸ்மான் (ரலி) செய்தார்கள் என்றால் அது நபிகள் இடத்திலே கிடைக்காத தீர்வாக இருந்தால் நிச்சயம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் இருக்கும் போது இப்படியான வழிகளை திறந்து விடும் போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி).............என்று தொடங்கி கடைசியாக பரங்கிப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பெரியவர்.................. வரையில் வழிகாட்டியாக வந்து இம்சை பண்ணி விடுவார்கள். இப்போதுதான் அவர்களை விட்டு விடுபட்டிருக்கிறோம். நன்றி. (கலிலுர் ரஹ்மான்)
அஸ்ஸலாமு அலைக்கும் !
வாத்தியாப்பள்ளியை கட்டும்போதே ஜும்மா பள்ளி என்று சொன்னவர்கள் , இதன் திறப்பு நிகழ்ச்சியையும் வெள்ளிக்கிழமை தினத்தில் ஜும்மா தொழுகை நடத்தி செய்திருக்க வேண்டும் . அப்படி செய்திருந்தால் ஜும்மா தொழுகை வேண்டுமா அல்லது வேண்டாமா என்கிற கேள்வியே எழுந்திருக்காது .கைர் தற்போது வாத்தியாப்பள்ளியில் ஜும்மா தேவைதான் காரணம் இந்த பள்ளியை சுற்றி வாத்தியாப்பள்ளி தெரு ,ஜெயின் பாவா தெரு ,அப்பாபள்ளி தெரு ,பாத்திமா நகர் ,காயிதே மில்லத் நகர் ,இவர்களுக்கெல்லாம் அருகில் உள்ளது
இந்த பள்ளிதான் .இது மட்டுமில்லாமல் இந்த பள்ளிக்கு பின் புறமாக பல நகர்களும் உருவாகிவிட்டது . இங்கு வசிக்கும் மக்கள் ஜும்மாவுக்கு செல்வதற்கு வேறு பள்ளிகளுக்கு செல்வதினால் நேரமும் ,தூரமும் அதிகம் என்பதையும் நாம் உணரவேண்டும் . ஆதலினால் வாத்தியாபள்ளியில் ஜும்மா தொழுகை நடத்துவதற்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் (சுல்தான் அப்துல் காதர்)
ஸலாம்,
சுல்தான் அப்துல் காதர் அவர்களே!,
வெள்ளிக்கிழமை திறப்பு நாளாக இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். நீங்கள் சொல்வது சரிதான். விடுமுறை நாளாக இருந்தால் தான் வெளியூர்களில் இருந்து வரும் உலமாக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாக இருக்கலாம். எனக்குள் சில சந்தேகங்கள் இருக்கிறது. நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
சந்தேகம் 1: நம்ம ஊரில் மார்க்க அறிஞர்களுக்கு ஒன்றும் பஞ்சம் கிடையாது. ஊரிலேயே இருக்கும் மதிப்பிற்குரிய அஹ்மது கபீர் மதனி, அப்துல் காதிர் மதனி போன்றவர்களே மிகச் சிறப்பாக பள்ளி வாசல்களை திறந்து வைத்து சிறப்பாக மக்களுக்கு அதன் சிறப்பினை எத்தி வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்கிற போது, அதனை தவிர்த்து, மெளலானா மெளலவி அல்ஹாஜ், அல்லாமா, அஷ்ஷெய்குல் அது அஷ்ஷெய்குல் இது போன்ற படு பயங்கரமான, கேட்டாலே குலை நடுங்கும் பட்டப் பெயர்களை வைத்திருப்பவர்களை கொண்டுவந்தால் தான் ஜனங்களுக்கு தெரியாமலேயே பள்ளி வாசல் திறக்கும் போதே பித் அத் போன்றவைகளையும் உள்ளே கொண்டு போய் விட முடியும் என்று நம்புகிறார்களா? இந்த திறமை நம் ஊர் ஆலிம்களுக்கு இல்லை என்று நம்புகிறார்களா? நம்ம ஊர் மார்க்க அறிஞர்களை கொண்டே திறப்பதாக இருந்தால் உங்கள் ஆசைப் போல் ஜும்ஆ நாளிலேயே திறந்திருக்கலாம். உண்மை என்னவென்று எனக்கு விளங்கவில்லை.
சந்தேகம் 2: தராவீஹ் தொழுகை உமர் (ரலி) அவர்கள் கால்த்தில் 20 ரக் ஆத் ஆக நீட்டிக்கப்பட்டது என்றும், உஸ்மான் (ரலி) காலத்தில் ஜும்ஆ விற்காக கடைத்தெருவில் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் ஆதாரம் கொண்டு வரும் உலமா பெருமக்கள், மீலாது நபி கொண்டாட்டங்களை இவர்களில் யாரவது கொண்டாடினார்களா? 3 நாள் தொடர் நிகழ்ச்சி வைத்து, போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கினார்களா? மாய்ந்து மாய்ந்து அதற்காக எழுதி மக்களை திரட்டினார்களா? என்று கேட்டால் அது வந்து.... என்று எற்கனவே சொன்ன பழைய ரெடிமெட் பதிலைத்தான் சொல்ல கேட்டிருக்கிறோம். நபிகள் நாயகத்தின் மீது இவர்கள் கொண்டிருக்கும் அளப்பறிய அன்பின் வெளிப்பாடாம் இது!
நபிகள் நாயகதின் மீது அளப்பறிய அன்பு கொண்டவர்கள் என்றால் அபூபக்கர் (ரலி) அல்லவா அதற்கான தகுதி படைத்தவர்கள். அவர்கள் அல்லவா மீலாத் நபி திருநாளை 7 நாள் கொண்டாட்டமாக கொண்டாடி, பெரியவர்களுக்கு பேச்சுப் போட்டியும், பெண்களுக்கு தனி இட வசதியும், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டியும் நடத்தி பரிசுகளை வாரி வழங்கி நபிகள் (ஸல்) அவர்களை சிறப்பித்து இருக்க வேண்டும்? அபூபக்கர் (ரலி) அவர்களின் அன்பை விடவா மற்றவர்களின் அன்பு மேலோங்கி இருக்கிறது என்கிற சந்தேகம் எனக்குள் வருகிறது. மிஃராஜ் உடைய இரவை கலீபாக்களில் யாராவது கொண்டாடி நோன்பு இருந்தார்களா? என்றால் அதற்கும் விளக்கம் கிடைக்கவில்லை.
ஆக, மீலாத் நபி கொண்டாட்டங்களையும், மிஃராஜ் இரவு விஷயத்திலும் இந்த 3 கலீபாக்களிடமிருந்தும் ஆதாரங்களை புறக்கணிக்கும் உலமா பெருமக்கள், ஜும்ஆ வின் 2 வது அழைப்பையும் (பங்கு அல்ல-அழைப்புதான். ஒலி பெருக்கி இல்லாத நாளில் கடைத்தெரு மக்களுக்கு ஞாபகமூட்ட கொடுக்கப்பட்ட அழைப்பு), தராவீஹ் இல் 20 ரக் ஆத் ஐயும் உஸ்மான் (ரலி), உமர் (ரலி), செய்தார்களே! இவர்களை புறக்கணிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களே தமக்கு விருப்பமானவைகளை மட்டும் ஆதாரமாக எடுத்து கொண்டும், அவர்கள் செய்யாததை செய்து கொண்டும் அதாவது அவர்களை புறக்கணித்து கொண்டும் (அவர்கள் செய்யாததை செய்வது அவர்களை புறக்கணிப்பதற்கு சமம் தான்) நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்களே? என்ற சந்தேகம் எனக்குள் உண்டு. (கலீலுர் ரஹ்மான்)
சலாம் ,
எளிதாக கூறவேண்டும் என்றால் ,அந்த விளாகத்தில் குடி இருப்புக்கள் அதிகமாகி வருகின்றது ,
குரான் வசனத்தையே சிறிய வசனமாக ஓத வேண்டும் ,காரணம் வயோதிகர்கள்,இயலாதவர்கள் ,வியாதியஸ்தர்கள், நேரம் நிற்க இயலாது என்பதை சுட்டிகாட்டினார்கள் நபி ஸல் அவர்கள் (சரியான ஹதீஸ் விளக்கம் எனக்கு தெரிய வில்லை)
இந்த சூழ் நிலையில்,மேற்கண்ட சூழ் நிலையில் உள்ளவர்கள் ஜுமா தொழுகையை எப்படி தூரமாக உள்ள பள்ளிக்கு சென்று தொழுக முடியும்
அங்கே ஜும்மா வைப்பதினால் மார்க்க அடிப்படையில் தவறு இருப்பதாக தெரியவில்லை வைப்பதினால், தவறு இருந்தால் ,எதிர்பவர்கள் சுட்டி காட்டலாம் (நவுஸாத் அலி)
எளிதாக கூறவேண்டும் என்றால் ,அந்த விளாகத்தில் குடி இருப்புக்கள் அதிகமாகி வருகின்றது ,
குரான் வசனத்தையே சிறிய வசனமாக ஓத வேண்டும் ,காரணம் வயோதிகர்கள்,இயலாதவர்கள் ,வியாதியஸ்தர்கள், நேரம் நிற்க இயலாது என்பதை சுட்டிகாட்டினார்கள் நபி ஸல் அவர்கள் (சரியான ஹதீஸ் விளக்கம் எனக்கு தெரிய வில்லை)
இந்த சூழ் நிலையில்,மேற்கண்ட சூழ் நிலையில் உள்ளவர்கள் ஜுமா தொழுகையை எப்படி தூரமாக உள்ள பள்ளிக்கு சென்று தொழுக முடியும்
அங்கே ஜும்மா வைப்பதினால் மார்க்க அடிப்படையில் தவறு இருப்பதாக தெரியவில்லை வைப்பதினால், தவறு இருந்தால் ,எதிர்பவர்கள் சுட்டி காட்டலாம் (நவுஸாத் அலி)
ஸலாம்
இந்த வாரம் முதலாவது ஜும்ஆ நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம், சுன்னத்தான முறையில் ஜும்ஆ நடத்தப்படவேண்டும் என்ற முஹல்லாவாசிகள் - குறிப்பாக இளைஞர்கள் கோரிக்கையும், ஊர் வழக்கப்படிதான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்ற இன்னும் சில - பலரது கோரிக்கையும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளி நிர்வாகிகள் ஜும்ஆவை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகின்றது.
அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் பள்ளி என்றால் அங்கு ஊர் வழக்கத்திற்கும், நடப்பிற்கும் என்ன வேலை என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
சுன்னத்தான ஜும்ஆவிற்காக உழைப்போம், பிரார்த்திப்போம். (ஜி என்)
இந்த வாரம் முதலாவது ஜும்ஆ நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வாத்தியாப்பள்ளியில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம், சுன்னத்தான முறையில் ஜும்ஆ நடத்தப்படவேண்டும் என்ற முஹல்லாவாசிகள் - குறிப்பாக இளைஞர்கள் கோரிக்கையும், ஊர் வழக்கப்படிதான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்ற இன்னும் சில - பலரது கோரிக்கையும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளி நிர்வாகிகள் ஜும்ஆவை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகின்றது.
அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் பள்ளி என்றால் அங்கு ஊர் வழக்கத்திற்கும், நடப்பிற்கும் என்ன வேலை என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
சுன்னத்தான ஜும்ஆவிற்காக உழைப்போம், பிரார்த்திப்போம். (ஜி என்)
ஸலாம்
வாத்தியாப்பள்ளி வாசலில் குர்ஆன் ஹதீஸ் சிந்தனை ஆழமாக ஓங்கி ஒலித்துவிடக் கூடாது என்பதில் பலர், குறிப்பாக பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா தீவிர முனைப்புக் காட்டி வருவதாக தெரிகின்றது. உலமாக்கள் என்றப் பெயரில் கண்டதையும் இஸ்லாம் என்று சொல்லித் திரியும் அந்த கூட்டத்தை சார்ந்த ஒருவர் "வாத்தியாப்பள்ளியில் கபீர் மதனி, அப்துல் காதர் மதனி இருவரையும் பேச விடக் கூடாது" என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
வாத்தியாப்பள்ளி வாசலில் குர்ஆன் ஹதீஸ் சிந்தனை ஆழமாக ஓங்கி ஒலித்துவிடக் கூடாது என்பதில் பலர், குறிப்பாக பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா தீவிர முனைப்புக் காட்டி வருவதாக தெரிகின்றது. உலமாக்கள் என்றப் பெயரில் கண்டதையும் இஸ்லாம் என்று சொல்லித் திரியும் அந்த கூட்டத்தை சார்ந்த ஒருவர் "வாத்தியாப்பள்ளியில் கபீர் மதனி, அப்துல் காதர் மதனி இருவரையும் பேச விடக் கூடாது" என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
அப்துல்காதர் மதனி, கபீர் மதனி இவர்கள் பேசினால் இந்த மண்ணாங்கட்டி உலமாக்களின் அறியாமைகள் தொடர்ந்து வெளியில் தெரிய ஆரம்பித்து விடும் என்ற பயம் தான் இப்படியெல்லாம் உளற செய்துள்ளது.
உலமா, ஆலிம் என்ற அந்தஸ்த்து இவர்களுக்கு இருந்தால் மார்க்கம் பற்றி அப்துல்காதர் மதனியுடன், கபீர் மதனியுடன் விவாதித்து இவர்களின் இஸ்லாத்தை நிரூபிக்கட்டும் பார்க்கலாம். (ஜி என்)
ஸலாம்,
இஸ்லாமிய சமுதாய மக்களை வழி கெடுப்பதற்காகவே உலமாக்கள் என்ற பெயரிலே இப்படிப்பட்டவர்களை சில/பல மதரஸாக்கள் உருவாக்கி வருகிறது. அறியாமை காலத்தில் தான் இவர்களின் வலையிலே சிக்கிக் கொண்டு இருந்தோம். இப்போது இஸ்லாம் திறந்த புத்தகமாக இருக்கிறது. Online ல் தமிழிலேயே விளங்கி கொள்ள முடிகிறது. இதில் கவலைக்குறிய விஷயம் என்ன வென்றால், Online ல் உலா வரும் அன்பர்கள் கூட இந்த உலமாக்கள் பின்னால் செல்வதுதான்.
உண்மை இதுதான் என்று தெரிந்திருந்தாலும், முன்பு அப்படி பேசிவிட்டோமே இப்போது எப்படி திரும்பி வருவது என்ற குழப்பத்திலேயே சிலர் வேறு வழி தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள். வேறு சிலரோ சிலரை மனதளவில் எதிரியாக நினைத்து அவர் என்ன சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையிலே இருக்கிறார்கள். இவர்களின் மெளனம் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு ஆதரவாகி விடுகிறது.
அல்லாஹ்விற்காக உங்களின் மெளனத்தை கலையுங்கள். சொல்வது யார் என்று பார்க்காமல், சொல்வதில் உள்ள உண்மைகளை கொண்டு பயன் பெறுங்கள். அவர்மட்டும் சரியாக நடக்கிறாரா? என்ற கேள்வியை கேட்பதற்கு முன்பு நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறோமா? என்று நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், இதற்கு விடை கிடைத்து விடும். 100% சரியான மனிதன் ஒருவனும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
நண்பர்களாக இருந்தாலும் தவறான கொள்கைகளை கொண்டிருந்தால் அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பதே சிறந்தது. இல்லையெனில், வாதத்திறமையினால், உங்களையும் வழிகேட்டிற்கு கொண்டு சென்று விடுவார்கள்.
இன்னும் சொற்ப காலமே வாழப் போகிறோம். அதுவரை இந்த போலி உலமாக்களை புறக்கணித்து, உண்மையான இஸ்லாத்தினை விளங்கிக் கொள்ள நீங்களாகவே முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு துணையாக இருப்பான். நன்றி (கலிலுர் ரஹ்மான்)
கபீர் மதனியும் அப்துல் காதர் மதனியும் பேசி இனிமேலா இவர்களின் அறியாமை வெளிவரப்போகிறது? இவர்களின் அறியாமைகள் வெளி வந்து வருடங்கள் பல உருண்டோடிவிட்டாலும், வறட்டு பிடிவாதத்தினால் இன்னும் இவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஊரில் இருக்கும் வரையிலும் இவர்கள் இப்படித்தான் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கும் நேர்வழி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம். (முஹம்மத் ரஃபி)
உஸ்மான் ரலி அவர்கள் காலத்தில் ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு சொல்லப்பட்டது என்று கூறியே சிலர் நம்மை ஏமாற்ற பார்கிறார்கள், கலீபாவின் காலத்தில் ஜும்மாக்கான அறிவிப்பு கடைதெருவில் சொல்லப்பட்டது தவிர அவர்கள் இரண்டு பாங்கை அறிமுகபடுத்தவில்லை. வாத்தியாபள்ளி மட்டும் அல்ல ஊரில் உள்ள அணைத்து ஜும்மா பள்ளிகளிலும் நபி வழி முறைபடி ஜும்மாவுக்கு ஒரு பாங்கு தான் கூற வேண்டும். சுன்னத்தை பேணுகிறோம் என்று கூறுவோர் நபிவழியை அமல்படுத்த தயாரா?
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜும்மா நாளின் முதல்பாங்கு இமாம் சொற்பொழிவுமேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது "ஸவ்ரா' எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள். நூல்: புகாரி (முஹம்மது பைஸல்)
*-*-*-*-**-*-*-*-*-*-**--*-*-*--*
இத்துனை கருத்தாடல்களுக்கு பிறகும் சுன்னாத்தான வழிகளை புறக்கணித்து வாத்தியாப்பள்ளி நிர்வாகம் ஜமாஅத்துல் உலமாவுடன் கைகோர்த்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஜும்ஆவை ஆரம்பித்துள்ளார்கள்.
இஸ்லாமிய தேடல் நிறைந்த, சுன்னாவை நிலைநாட்ட வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்களை மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த முடிவு.
இதன் பிறகு மீராப்பள்ளியில் ஹாபிள்களுக்கு பட்டமளிப்பு விழா என்று ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது. அங்கும் ஜமாஅத்துல் உலமாவின் ஆதிக்கம்.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு நீண்ட காலமாக வாத்தியாப்பள்ளியில் இமாமாக பணியாற்றி வரும் சகோதரர் ஹபிபுல்லா (ஆலிம்) அழைக்கப்படாமல், பத்திரிக்கையில் பெயர் போடப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார். ஏற்கனவே ஜும்ஆ விஷயத்தில் கொதிப்படைந்துள்ள முஹல்லாவாசிகளுக்கு இது இன்னும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விளைவு முஹல்லாவாசிகள் ஒரு நோட்டிஸ் மூலம் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
கொள்கையையெல்லாம் புறக்கணித்து ஊரின் ஒற்றுமையைப் பற்றி பேசுவோரே.... உங்கள் நிலையை சிந்தியுங்களேன்.
Labels:
பட்டமளிப்பு,
பள்ளி கூட்டமைப்பு,
முஹல்லாவாசிகள்,
வாத்தியாப்பள்ளி,
ஜும்ஆ
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்


No comments:
Post a Comment