Monday, July 29, 2013
வாகனக் கூட்டம் பற்றி ஹதீஸ் ஆய்வு - தொடர் - 1
வாகனக் கூட்டம் ஹதீஸ்
1 - ஹதீஸின் கருத்தென்ன?
2 - இன்றைய புரிதல் என்ன?
3 - அறிவிப்பாளர்களின் நிலை என்ன?
அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்த்து நோன்பைத் துவங்க வேண்டும்
என்போரின் பிரதான ஹதீஸ் ஆதாரங்கள் மூன்று. (இவைகள் அவர்கள் சரிகாண்போரின்
மொழி பெயர்ப்பில் அவர்கள் அறிந்த ஹதீஸ்கள்)
1) பிறைப் பார்த்து
நோன்பை வையுங்கள். பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள். பிறைத் தெரியாமல்
மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக்கிக் கொள்ளுங்கள்.
2) வாகனக் கூட்டத்தின் ஹதீஸ் அடிப்படையில் அருகிலிருந்து வரும் தகவலையும் ஏற்கக் கூடாது.
3) குரைப் இப்னு அப்பாஸ்(ரலி) சம்பவத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் தகவலையும் ஏற்கக் கூடாது.
ஆக நேரடியாக பிறைப் பார்த்தே நோன்பைத் துவங்க வேண்டும்.
மனிதர்கள் என்ற முறையில் சிலவற்றையோ, பலவற்றையோ தவறாக விளங்க
வாய்ப்புள்ளது என்பதால் இவர்கள் ஹதீஸ்களை தவறாக விளங்கியுள்ளார்கள் என்பது
நமது கருத்து.
நாமும் கூட ஆரம்பத்தில் லோக்கள் பிறை, பிறகு
சர்வதேசப் பிறை என்ற நிலையிலிருந்தோம். ஒன்றிற்கு பின் இன்னொன்றின்
ஆதாரம் சரியாக இருந்ததால் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம்.
எங்காவது பிறையைப் பார்க்கத்தான் வேண்டும் என்ற சர்வதேசப் பிறை
நிலைப்பாடும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மிக சரியான ஆதாரங்களால்
முன் வைக்கப்படும் முடிவல்ல என்பதை தீவிர ஆய்வுக்குப் பிறகு தெளிவு
கிடைத்ததால் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள கணக்கு அடிப்படையில் நாட்களை,
மாதங்களை, வருடங்களை தீர்மானிப்பதே சரியான இஸ்லாமிய வழிமுறையாகும் என்ற
கருத்துக்கு வந்துள்ளோம்.
நாள் காட்டி இல்லாத ஒரு வாழ்க்கை
நெறியை ரப்புல் ஆலமீன் கொடுக்கவில்லை. உலக இயக்கத்திற்கு ஒரு நாள்காட்டி
மிக மிக அவசியம் என்பதை குர்ஆன் தெளிவாக முன்வைத்துள்ளதால் யூத
கிறிஸ்த்தவர்களால் முஸ்லிம்களிடமிருந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்ட
சந்திர காலண்டரை மீண்டும் உலகம் - குறிப்பாக முஸ்லிம்கள் நடைமுறைக்கு
கொண்டு வர மிகத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்ற பேராவா
கொண்டுள்ளோம்.
மாதம் என்பது 29 அல்லது 30 ல் முடியக் கூடிய
விதத்தில் இறைவன் ஏற்படுத்தியுள்ள காலத்தை 30 ஆகவும் 31 ஆகவும்
இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு மாற்றி நடைமுறைப்படுத்தி அதில்
உலகை ஐக்கியப்படுத்தி விட்டது.
காலத்தை
விருப்பப்பட்ட மாதிரியெல்லாம் மாற்றிக் கொள்வது நம்மை குஃப்ரில் கொண்டு
போய் விட்டு விடும் என்று திருக் குர்ஆன் வன்மையாக எச்சரித்திருக்கும்
போது சந்திர காலண்டருக்கு எதிராக நாட்களை மாற்றி உலகை இயக்கிக்
கொண்டிருக்கின்றது இஸ்லாத்திற்கு மாற்றமான சக்திகள். இந்நிலை மாறி
அல்லாஹ்வின் நாள்காட்டி நடைமுறைக்கு வர வேண்டும் என்ற பேரார்வத்தில் சந்திர
நாள்காட்டிக்கு எதிராக முஸ்லிம்களாலேயே எடுத்து வைக்கப்படும் - அதுவும்
நபியின் பெயரால் எடுத்து வைக்கப்படும் - ஆதாரங்களை நடுநிலையுடன் அலசி
பார்த்தால் அல்லாஹ்வின் ஏற்பாட்டிற்கு எதிரான ஒரு நிலையை நபி(ஸல்)
கொண்டிருக்கவே முடியாது என்ற அசைக்க முடியாத - ஆணித்தரமான உண்மைக்கு நாம்
வரலாம்.
எடுத்து வைக்கப்படும் ஆதாரங்கள் ஒன்று தவறாக விளங்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஆதாரங்களே தவறாக இருக்க வேண்டும்.
அந்த
வகையில் குரைப் இப்னு அப்பாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை அலசும்
போது அதை விளங்குபவர்கள் தவறாக விளங்கியுள்ளார்கள் என்பதை உணர முடிந்தது.
அதை நாம் இந்த பிறை கலந்துரையாடலில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
வாகனக் கூட்டம் ஹதீஸ்
سنن ابن ماجه - كِتَاب الصِّيَامِ - فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا وأن يخرجوا إلى عيدهم من الغد
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ
عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي
مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ
فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا
عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ رَأَوْا
الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ
مِنْ الْغَدِ
இந்த ஹதீஸ் பல்வேறு நூட்களில் வந்துள்ளது. (அறிவிப்பாளர் தரம் குறித்து இறுதியில் அலசுவோம்)
இந்த ஹதீஸிற்கு வரும் தகவலை ஏற்கக் கூடாது என்று கூறுவோரின் மொழி பெயர்ப்பு கீழே:
///(மேக
மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு
நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு
வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள்
பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள்
திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.///)
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்
இந்த
ஹதீஸில் "ஃப அமரஹும்" அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று
வருவதால் வரும் தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களை நோன்பை
விடுமாறும், அவர்களின் பெருநாள் திடலுக்கு செல்லமாறும் அவர்களுக்குதான்
நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே இது பொதுவான அறிவிப்பு அல்ல.
வந்தவர்களுக்குரிய அறிவிப்பு.
இதுதான் அந்தந்தப் பகுதி பிறை என்போர் எடுத்து வைக்கும் வாதம்.
இதற்கு நமது விளக்கத்திற்கு செல்வதற்கு முன்னால், அவர்களின் மொழி பெயர்ப்பில் ஏராளமான கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.
முதலில் சில கேள்விகளை முன் வைக்கிறோம். இதற்கு அவர்களின் நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.
1)
ரமளானின் 29 நோன்புகளை முடித்து 30ம் நாள் பிறைப் பார்த்த ஒருவர்
வெளிநாட்டிலிருந்து (உதாரணமாக சவுதியிலிருந்து) அன்றிரவே தமிழகம் வந்து
சேருகிறார். "நான் பிறைப் பார்த்து விட்டு வருகிறேன்" என்கிறார். நீங்கள்
அவருக்கு கொடுக்கும் ஃபத்வா என்ன? நீ எங்கு பிறைப் பார்த்தாயோ அங்கு
சென்று பெருநாள் தொழு.. ஓடு... என்று சொல்வீர்களா..?
கர்நாடகத்திலிருந்தோ,
கேரளாவிலிருந்தோ பிறைப் பார்த்த ஒருவர் சென்றை வருகிறார். பிறை
பார்த்தேன் என்கிறார். இது நமக்குரியதல்ல ஓடு உன்னிடத்தில் சென்று
பெருநாள் தொழு என்பீர்களா
" எந்த ஒரு ஆத்மாவையும் சக்தியை தாண்டி நிர்பந்திக்க மாட்டான்..." என்ற வசனத்தை எடுத்துக் காட்டி சவுதியிலிருந்து வந்தவர் தமிழகத்தில் தொழலாம் என்று பதிலளிக்காதீர்கள். இந்த வசனத்தை எடுத்துக் காட்டி வாகனக் கூட்டத்தை நபி(ஸல்) தடுத்து நிறுத்தவில்லை. (அதாவது வாகனக் கூட்டத்திற்கு அறிவித்தார்கள் என்று உங்கள் விளக்கப்படி)
Sajidur Rahman Sajid இந்த ஹதீஸிர்க்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுக்க வருகிறீா்கள்.
அன்புச்
சகோதரர் சாஜிதுர்ரஹ்மான், உங்கள் புரிதலில் நாம் கேள்விகள் வைக்க
காரணம் அந்த - அத்தகைய ஹதீஸ்களுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம்
உங்களாலேயே மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
நடைமுறை
சாத்தியமற்ற எது ஒன்றையும் இஸ்லாம் சட்டமாக முன்வைக்கவில்லை. சில
சட்டங்கள் ஆரம்பத்தில் சற்று சாத்தியக்குறைவாக இருக்கலாம். பிறகு அது
சரியாகி விடும். சாத்தியமே இல்லாத சட்டங்கள் இஸ்லாத்தில் இல்லை.
நாம்
வைத்துள்ள கேள்விகளையும், இனி வைக்கப்போகும் கேள்விகளையும் நீங்கள்
நடுநிலையோடு அணுகினால் அந்த ஹதீஸிற்கு உங்கள் தரப்பில் கொடுக்கப்படும்
விளக்கம் தவறென்று உணர்வீர்கள்.
நாம்
கலந்தாய்வு செய்கிறோம். பிடிவாத போக்கு நம்மிடம் இருக்காது அல்லாஹ்
காப்பாற்றட்டும். நாம் விளங்கியுள்ள ஒன்றிற்கு மாற்றமாக கருத்து
ஆதாரங்களுக்கு நெருக்கமாக இருப்பின் அதை ஏற்பதே சிறந்ததாகும்.
கேள்விகளை மீளாய்வு செய்யுங்கள்.
Abu Bakr As-Siddiq ///1)
ரமளானின் 29 நோன்புகளை முடித்து 30ம் நாள் பிறைப் பார்த்த ஒருவர்
வெளிநாட்டிலிருந்து (உதாரணமாக சவுதியிலிருந்து) அன்றிரவே தமிழகம் வந்து
சேருகிறார். "நான் பிறைப் பார்த்து விட்டு வருகிறேன்" என்கிறார். நீங்கள்
அவருக்கு கொடுக்கும் ஃபத்வா என்ன? நீ எங்கு பிறைப் பார்த்தாயோ அங்கு
சென்று பெருநாள் தொழு.. ஓடு... என்று சொல்வீர்களா..?
கர்நாடகத்திலிருந்தோ,
கேரளாவிலிருந்தோ பிறைப் பார்த்த ஒருவர் சென்றை வருகிறார். பிறை
பார்த்தேன் என்கிறார். இது நமக்குரியதல்ல ஓடு உன்னிடத்தில் சென்று பெருநாள்
தொழு என்பீர்களா...?///
இரண்டு கேள்விகள் கேட்டுலீர்கள்
அதற்கான பதில்கள்
1.ஒருவர்
சுபுஹ் தொழுகை தொழுத பின் விமானத்தில் ஒரு தேசத்திற்கு செல்கிறார் அங்கு
அப்போ தான் சுபுஹ் நேரம் வருகிறது அவருக்கு அங்கு சுபுஹ் கடமை இல்லை அடுத்த
தொழுகையை அவர் தொழுதால் போதும்.
அது
போல் தான் ஒருவர் வருகிறார் அவருக்கு ஒரு நோன்பு கூட இருந்தால் 30 நிறைவு
செய்து விட்டு அந்த பகுதியுடன் தான் அவர் பெருநாள் கொண்டாட வேண்டும்.
2.கர்நாடகத்தில்
இருந்தோ கேரளதிலில் இருந்தோ ஒருவர் வந்தால் இங்கு பெருநாள் இல்லை நபியின்
சுன்னாஹ்வை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்ல வேண்டும் !
"நீ
விரும்பினால் நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய் பெருநாள்
கொண்டாடிகோல் அல்லது எங்கள் பகுதிக்கு என்று பெருநாளோ அன்று இணைந்துகொள்!"
என்று பதில் கூறுவோம்
இவாறு தான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டி தந்தார்கள் !
காட்டி தந்த ஹதீஸ்களை மீண்டும் காட்டினாள் வேறு விளக்கம் கொடுப்பீர்கள் .
Gn Voice ஸலாம்.
சமாளிப்பும் சுயகருத்தும் இப்போது எங்கிருந்து வருகின்றது என்று வாசகர்கள் புரிந்து வருவார்கள் சகோ. அபூபக்கர்.
உங்கள் பதிலில் உள்ள தவறுகளைப் பாருங்கள்
முதல்
தவறு) சுப்ஹ் தொழுகையெல்லாம் பொருத்தமே இல்லாத விளக்கம். ஏனென்றால்
"உனக்கு சுப்ஹுக்குரிய இடத்திற்கு ஓடு" என்றெல்லாம் யாரையும் சொல்லவில்லை.
ஆனால் உங்கள் புரிதல்படி பிறைப்பார்த்தவர்களை அவர்களிடத்திற்கு செல்ல
நபி(ஸல்) சொன்னார்கள் என்பதற்கு நீங்களே ஹதீஸை காட்டுகிறீர்கள்.
இரண்டாம்
தவறு) ////அது போல் தான் ஒருவர் வருகிறார் அவருக்கு ஒரு நோன்பு கூட
இருந்தால் 30 நிறைவு செய்து விட்டு அந்த பகுதியுடன் தான் அவர் பெருநாள்
கொண்டாட வேண்டும்./////
அதெப்படி,
பிறைப் பார்த்துவிட்டு மாதத்தை முடித்து விட்டு பெருநாள் தினத்தில்
வருபவருக்கு உனக்கு பெருநாள் இல்லை. நோன்பு வை என்று சொல்வீர்களா..?
இதற்கு என்ன ஆதாரம்? ஏன் மீண்டும் அவரை சவுதி திரும்ப சென்று பெருநாள்
கொண்டாட சொல்ல தடையுள்ளதா? அவருக்கான பெருநாளை அலட்சியப்படுத்தி நோன்பு
வைக்க சொல்வது நியாயமான வழிமுறைதானா..?
மூன்றாம்
தவறு) ///2.கர்நாடகத்தில் இருந்தோ கேரளதிலில் இருந்தோ ஒருவர் வந்தால்
இங்கு பெருநாள் இல்லை நபியின் சுன்னாஹ்வை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று
சொல்ல வேண்டும் !
"நீ
விரும்பினால் நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய் பெருநாள் கொண்டாடிகோல்
அல்லது எங்கள் பகுதிக்கு என்று பெருநாளோ அன்று இணைந்துகொள்!" என்று பதில்
கூறுவோம் ///
நீ
விரும்பினால் எங்களோடு பெருநாள் கொண்டாடு, விரும்பினால் உன் இடத்திற்கு
போ... என்று நபி(ஸல்) சொல்லவில்லையே... (அதாவது உங்கள் ஹதீஸ்
புரிதலின்படி)
"திரும்பி
போ" என்று நபி(ஸல்) கட்டளையிட்டதாகத்தானே.. சொல்லிக்
கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு உங்கள் ஹதீஸ் விளக்கம் தவறு என்று
சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டவுடன் இந்த "விரும்பினாலை" உள்ளே நுழைத்து
புது விளக்கம் கொடுக்கிறீர்கள்.
எப்படியாவது
சமாளிப்போம் - நாங்கள் விளங்கியது தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ள
மாட்டோம் என்பது போலத்தான் இருக்கின்றது உங்கள் விளக்கம். (அடுத்தத் தொடர் பார்க்கவும்)
Labels:
அறிவிப்பாளர்,
ஆய்வு,
பலவீனம்,
வாகனக கூட்டம்,
ஹதீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment