Monday, July 1, 2013
ஹிஜ்ரி 1434 ரமளான், 9-07-2013 செவ்வாய் கிழமை ஆரம்பம்
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَِ
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா?நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?”. (அல்-குர்ஆன் 2:44)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَِ
كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَِ
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது”. (அல்-குர்ஆன் 61:2-3)
இந்த வசனங்கள் அடிப்படையில் உண்மையை விளங்கியவர்கள் அந்த உண்மையை பின்பற்ற - நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்த வசனங்கள் அடிப்படையில் உண்மையை விளங்கியவர்கள் அந்த உண்மையை பின்பற்ற - நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
ஹிஜ்ரி 1434 வருட ரமளான் மாதம் எப்போது துவங்குகின்றது?
பிறைப் பார்த்தபிறகுதான் நாம் மாதத்தை அறிவோமா..! அடைவோமா..!
மாதத்தின் துவக்கத்தையும் - முடிவையும் அறிவிக்கவே ரப்புல் ஆலமீன் சந்திரன் என்ற பிரமாண்டமான படைப்பைப் படைத்து அது குறித்து அறிவித்துள்ளான்.
சந்திரனின் நாள்காட்டியே சரியான நாள் காட்டி, நம் பார்வைக்கு வளர்ந்து பிறகு தேய்ந்து ஒரு நாள் முழுவதும் மறைந்து மாதத்தை முடித்து அடுத்த மாதத்தின் துவக்கத்தை அறிவிக்கின்றது சந்திரன்.
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَِ
அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான் (அல்குர்ஆன் 10:5)
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக (அல் குர்ஆன் 2:189)
الْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِِ
சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. (அல்குர்ஆன் 36:39)
அன்புச் சகோதரர்களே... இந்த வசனங்களை ஊன்றி கவனித்து சிந்தியுங்கள். அல்லாஹ் உலகைப் படைத்த காலம் தொட்டே காலண்டரையும் உருவாக்கி விட்டான். அது சந்திரக் காலண்டர். அதன் வளர் நிலை - தேய் நிலை - முடிவு எல்லாவற்றையும் இறைவன் சுட்டிக் காட்டி இது காலங்காட்டி என்று தெளிவு படுத்தியுள்ளான். அந்த சந்திரக் காலண்டரை நாம் முற்றிலும் மறந்து அல்லது மறுத்து போனதன் விளைவே தொடரும் பிறைக் குழப்பம்.
குர்ஆன் ஹதீஸ்களை சிந்தித்து ஆய்வு செய்யும் உள்ளங்கள் அல்லாஹ்வின் அறிவியல் இயக்கமான சந்திர நாள்காட்டியை கூறுபோட மாட்டார்கள். காரணம் அது இறைவன் வகுத்தளித்த அறிவியல் கணக்கு அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றது.
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍِ
சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன (அல்குர்ஆன் 55:5)
சூரிய கணக்கை விட சந்திர கணக்கை வரையறுப்பது விஞ்ஞானிகளுக்கு எளிதானது. அதன் இயக்கத்தை அல்லாஹ் அப்படித்தான் ஏற்படுத்தியுள்ளான்.
அப்படி வரையறுக்கப்பட்ட அல்லாஹ்வின் அறிவியல் இயக்கப்படி 1434 ஹிஜ்ரி வருடமான இந்த வருடத்தின் ரமளான் துவக்கம் எதிர்வரும் 09-07-2013 செவ்வாய்கிழமைத் துவங்குகின்றது. அன்றைக்கு நாம் நோன்போடு இருக்க வேண்டும் என்பதை வாசகர்களுக்கு எத்தி வைக்கிறோம். சிந்தித்து முடிவெடுங்கள்.

Labels:
1434 ரமளான்,
ஜுலை 7
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்


36:39 ,33:36 ஆகிய இரு வசனங்கள் உங்கள் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதே ?
ReplyDeletewalikumuassalam
ஸலாம் எப்படி எதிராக உள்ளது என்பதை விளக்குங்கள். புரிந்துக் கொள்ள உதவும்.
ReplyDelete