Monday, July 29, 2013

தவறாக புரியப்பட்ட சிரியா பிறை சம்பவம்!

சிரியாவிலிருந்து வந்த தகவலை இப்னு அப்பாஸ்(ரலி) ஏன் ஏற்கவில்லை.  (ஆய்வு - விளக்கம்)

தவறாக புரியப்பட்ட சிரியா பிறை சம்பவம்

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَال َ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا  سْمَعِيلُ وَهُوَ ابْنُ  جَعْفَرٍ عَنْ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ  بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ  فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ  الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي  عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى  رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ  وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ  السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا  تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

இதுவே முஸ்லிமிலிருந்து அந்தந்தப் பகுதி  பிறை என்பவர்கள் வலுவான ஆதாரமாக  எடுத்துக் காட்டும் ஹதீஸ் ஆகும்.


இதன் மொழி பெயர்ப்பு

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள்  சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான்  சிரியாவில் இருக்கும் போது ரமளானின் பிறை தென்பட்டது.  வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி)  என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை  எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று   கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயேபிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள்.  ஆம்,  மக்களும் பார்த்தார்கள். நோன்பு  பிடித்தார்கள். முஆவியா (ரலி)  அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று  கூறினேன்.

அதற்கவர்கள் ஆனால்  நாங்கள் சனிக்கிழமை இரவில் தான்  பிறையைப் பார்த்தோம். எனவேநாங்கள்  (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது  முப்பது நாட்களைமுழுமையாக்கும் வரை  நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்''   என்றார்கள்.முஆவியா (ரலி) அவர்கள்  பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு  பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?''   என்று கேட்டேன். அதற்கவர்கள்,   போதாது. நபி(ஸல்) அவர்கள் இப்படித்  தான் எங்களுக்குக் 
கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று  கூறினார்கள்..

அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் இடம் பெறும் 'லைலத்"  என்ற பதத்திற்கு இரவு என்று மொழி  பெயர்க்காமல் நாள் என்றுதான் மொழி  பெயர்க்க வேண்டும் என்பது நமது  நிலைப்பாடு.  இருப்பினும் இரவு என்று  அவர்கள் புரிந்துள்ளதால் இரவு என்றே  வைத்துக் கொண்டு இந்த ஹதீஸ் என்ன  சொல்கின்றது என்பதை அறிவோம். 

இந்த ஹதீஸில் 'வரும் தகவலை ஏற்கக்  கூடாது என்ற நிலையில் இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்கள் இருந்தார்களா... அல்லது  வேறு செய்தியை அவர்கள் முன் வைத்து  பின்னால் வந்தவர்கள் தவறாக புரிந்துக்  கொண்டார்களா...?
தொலைத் தூரத் தகவலை ஏற்கக் கூடாது  என்ற கருத்தில் இப்னு அப்பாஸ்  அவர்கள் இருந்திருக்கவே முடியாது.  ரமளான் செய்தி கிடைத்து  அதுவும் ஆதாரப்பூர்வமாக கிடைத்து -  அந்தப்பகுதியின் ஆளுநரும் அதை உறுதிப்படுத்திய பின்னர் அது நமக்குரிய ரமளான் அல்ல என்று பின்வாங்கும் அளவிற்கு இப்னு அப்பாஸ் இருந்திருக்க  மாட்டார்கள்.

ரமளான் உலகின் பல பகுதிகளில்  வெவ்வேறாக வரும் என்பதற்கு இன்றைக்கு உள்ளவர்கள் எடுத்துக் காட்டும் 2:185 வசனத்தை (அந்த வசனம் அந்த கருத்தை சொல்லி இருந்தால்) அவர்கள் எடுத்துக் காட்டி 'உங்களுக்கு வேறு - எங்களுக்கு வேறு.."  என்று சிம்பிளாக முடித்திருக்கலாம்.
இதையும் செய்யவில்லை.

சிரியாவில் ரமளானின் முதல் பிறை வெள்ளிக்கிழமை என்றால் அன்றைக்கே அந்த செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு கிடைத்து அதைப் புறக்கணித்திருந்தாலாவது தூர தொலைவுத் தகவலை ஏற்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதில் ஓரளவு நியாயமிருக்கும்.  அதுவும் நடக்கவில்லை.
அப்படியானால் சிரியாவின் தகவலை அறிந்த பிறகு 'நபி(ஸல்) இவ்வாறுதான் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்"  என்று இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னதற்கு என்னதான் அர்த்தம்.

அந்த ஹதீஸில் வரும் 'இவ்வாறு" என்றால் என்ன?

தொடர்ந்து படியுங்கள்.

சிரியாவில் வெள்ளிக்கிழமை ரமளான் துவங்குகின்து.  அந்த ரமளானின் முதல் பிறை செய்தி மதினாவிற்கு எட்டவில்லை.  அதனால் இங்குள்ளவர்கள் சனிக்கிழமை ரமளானைத் துவங்குகிறார்கள்.

சிரியாவிலிருந்து திரும்ப வந்த குரைப் மாத இறுதியில் வருகிறார்.  அதாவது இப்னுஅப்பாஸ் அவர்களுக்கு மாதம் முடியும் முன் வந்து அறிவிக்கிறார்.

அவர் வந்து மாதம் முடிவதற்கு முன்னுள்ள கடைசி நாளில் அறிவிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

இப்போது கணக்கிடுங்கள்.

சிரியாவில்,

1  -  வெள்ளி
2  -  சனி
3  -  ஞாயிறு
4  -  திங்கள்
5  -  செவ்வாய்
6  -  புதன்
7  -  வியாழன்
8  -  வெள்ளி
9  -  சனி
10 - ஞாயிறு
11 - திங்கள்
12 - செவ்வாய்
13 - புதன்
14 - வியாழன்
15 - வெள்ளி
16 - சனி
17 - ஞாயிறு
18 - திங்கள்
19 - செவ்வாய்
20 - புதன்
21 - வியாழன்
22 - வெள்ளி
23 - சனி
24 - ஞாயிறு
25 - திங்கள்
26 - செவ்வாய்
27 - புதன்
28 - வியாழன்
29 - வெள்ளி

சிரியாவில் 29 நாட்களோடு ரமளான் முடிந்திருந்தால் வெள்ளிக்கிழமையோடு முடிந்து சனிக்கிழமை பிறை 1

சிரியாவில் 30 நோன்பு கிடைத்திருந்தால் சனிக்கிழமையோடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை பிறை 1

இப்னு அப்பாஸ் சனிக்கிழமை நோன்பைத் துவங்குகிறார்கள்.   குரைப் சனிக்கிழமைக்கு முன்பே வந்து இந்த தகவலை அறிவிக்கின்றார்.

அவர் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தாலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பொருத்தவரை மாதம் முடியவில்லை.  அவர்களுக்கு அன்று 28தான்.

28 ல் மாதம் முடியாது என்பதால் அவர்கள் வந்த தகவலை பரிசீலித்து நபி(ஸல்) மாதத்தை முழுமைப்படுத்தும் படிதான் நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்பதையே அங்கு சுட்டிக் காட்டுகிறார்கள்.

மாதம் 29ல் அல்லது 30ல் முடிய வேண்டும்.  வந்தவர் அறிவித்த தகவலை ஏற்றால் மாதம் குறைவுடையதாகின்றது.  28ல் மாதம் முடிகின்றது என்பதால் குறைவுடைய மாதத்தை நபி(ஸல்) கற்றுக் கொடுக்கவில்லை என்று மாதத்தை முழுமைப்படுத்துகிறார்கள்.
இதுதான் அந்த ஹதீஸ் முன் வைக்கும் செய்தி. 

இதைக் கூட விளங்காமல் தொலைவிலிருந்து வரும் தகவலை ஏற்கக் கூடாது என்று தவறான கருத்தை இன்றைக்கும் சிலர் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் அவர்கள் தகவலை புறக்கணிக்கவில்லை. மாதத்தை முழுமைப்படுத்த அந்த தகவல் போதாது என்றே அறிவுறுத்துகிறார்கள்.

சிரியாவின் முதல் பிறைத் தகவல் அன்றைக்கே மதினாவிற்கு கிடைத்து அவர்கள் அதை மறுத்திருந்தால் மட்டுமே இவர்கள் வாதம் ஓரளவு எடுபடும்.  இந்த ஹதீஸில் அந்தப் பேச்சுக்கு வழியே இல்லை.

தவறாக மாதம் துவங்கப்பட்டதால் மாதத்தை குறைவுடையதாக முடிக்க முடியாது. முழுமைப்படுத்தத்தான் வேண்டும்.   மாதம் தவறாக துவங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் குரைபிடம் பிறைப்பற்றிய கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அர்த்தமில்லாமல் வீணுக்காக அந்த கேள்விகள் கேட்கப்படவில்லை.

எனவே முஸ்லிமிலிருந்து வலுவான ஆதாரமாக அவர்கள் காட்டும் இந்த செய்தி அவர்கள் விளங்குவது போல் இல்லை என்பது நிசர்தனம். (அவர்கள் அந்த ஹதீஸை தவறாக விளங்கி வருகிறார்கள் என்று நாம் சொன்னது இப்போது இன்ஷா அல்லாஹ் சிந்தனைவாதிகளுக்கு புரிந்திருக்கும்.)

தலைப்பிறை ஒன்றுதான்.  அதைப் புறக்கணிப்பது ரமளான் பிறந்து - அல்லாஹ் மாதத்தை வெளிபடுத்திய பின்னரும் அதை புறக்கணிப்பதற்கு சமமாகும்.  அல்லாஹ் அந்த சிந்தனையிலிலுருந்து நம்மை காப்பானாக.
..............................
////சகோ.ஜி.என்.அவர்களுக்கு,
சிரியாவில் 29 நாட்களோடு ரமளான் முடிந்திருந்தால் வெள்ளிக்கிழமையோடு முடிந்து சனிக்கிழமை பிறை 1

சிரியாவில் 30 நோன்பு கிடைத்திருந்தால் சனிக்கிழமையோடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை பிறை 1 இது உங்கள் வாதம்.

எனது கேள்வி என்னவென்றால்,

மாதம் 29 ஆகவும் இருக்கும்,30 ஆகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நிலைப்பாடு.

எனவே ஒருவேளை சிரியாவில் 30 நாட்களோடு ரமலான் முடிந்து இருந்தால்,மதீனாவில் 29 ஆக இருந்து இருக்கும்.

இதில்,

1.மாதம் என்பது 29 ஆகவும் இருக்கலாம் என்ற நபிமொழியின் அடிப்படையில் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களும் பெருநாளை அறிவித்து இருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யாமல் 30 வரை நோன்பை பூர்த்தி செய்ய நினைக்கிறார்கள் என்றால் அதில் அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று தடுத்து இருக்கிறது.அவ்வாறு அவர்களை தடுத்தது பிறையை பார்க்க வேண்டும் என்ற விதியாக கூட இருக்கலாம் அல்லவா?

2. பெருநாள் அன்றைக்கு நோன்பு வைப்பது ஹராம் என்ற ஹதீஸ் இப்னு அப்பாஸ் அவர்களுக்கு தெரியாமலா இருந்து இருக்கும்? பெருநாள் அன்று நோன்பு வைப்பது ஹராம் என்று தெரிந்து இருந்தும் சிரியாவின்(30 நோன்பு கிடைத்து இருந்தால்) கணக்கு படி மதீனாவில் 29 நாட்கள் முடிந்து இருந்தும் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் நோன்பை எப்படி தொடர்ந்து இருப்பார்கள்?/// ஷாகுல் ஹமீத்

அன்புச் சகோதரருக்கு, உங்கள் கேள்வி நியாயமானதுதான் என்றாலும் கூட இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் தெளிவு கிடைத்து விடும்.

முதலில் வரும் தகவலை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் இப்னுஅப்பாஸ் அவர்கள் இல்லை என்பதை நாம் உறுதியாக புரிந்துக் கொள்ள வேண்டும்.  மாதத்தை முழுமைப்படுத்தும் விதத்தில் அந்த தகவல் கிடைத்திருந்தால் அவர்கள் ஏற்றிருப்பார்கள்.  மாதம் குறைவுடையதாகி விடும் என்பதால் தான் அவர்கள் அந்த தகவலை பரிசீலித்து பதிலளிக்கிறார்கள்.   இதை நாம் சந்தேகத்திற்கிடமின்றி விளங்க வேண்டும்.
நாட்களின் எண்ணிக்கையை கருத்தில் எடுக்காமல் "இப்னு அப்பாஸ் (ரலி) வந்த தகவலை ஏற்கவில்லை" "இப்னு அப்பாஸ் (ரலி) வந்த தகவலை ஏற்கவில்லை"... என்றே செய்தி, ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகின்றது.   இந்தத் தவறை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாட்களை நான் பட்டியலிட்டேன்.

இனி அந்த ஹதீஸை கூடுதலாக விளங்குவோம்.

அந்த ஹதீஸை அறிவிக்கும் குரைப் "அந்த மாதத்தின் கடைசியில் மதீனா வந்ததாக" அறிவிக்கிறார். ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ

அடுத்த மாதம் துவங்குவதற்கு முன் வருகிறார். அதாவது சனிக்கிழமைக்கு முன் வருகிறார். மாதத்தின் கடைசி நாளில் அவர் வருவதாகவே எடுத்துக் கொண்டாலும் ள்ளிக்கிழமைதான் கடைசி நாள்.  வெள்ளிக்கிழமையோடு சிரியாவில் 29 நாட்கள். ஆனால் மதீனாவில் முடியவில்லை.  

சிரியாவில் 29 நாட்களில் மாதம் முடிந்ததா..? 30 நாட்களில் மாதம் முடிந்ததா..? என்ற விபரம் கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி) "இன்றுதான் சிரியாவில் பெருநாள் தினம்" என்று எதை வைத்து தீர்மானிப்பார்கள்? 

சிரியாவில் பெருநாள் தினம் என்றைக்கு என்று தெரிந்தால் தான் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற சட்ட அடிப்படையில் மதீனாவில் நோன்பு வைக்காமல் இருந்திருக்க முடியும்.  தெரியாத போது, சந்தேகத்தைக் கொண்டு பெருநாள் தினம் என்று சொல்ல முடியாதல்லவா..? 

சிரியாவில் 30 நாட்கள் எடுத்திருந்தால் மதீனாவில் சனிக்கிழமை 29. ஒருவேளை சிரியாவில் 29 நாட்களோடு மாதம் முடிந்திருந்தால் அப்போது மதீனாவில் 28 பிறைகள்தான்.  மாதம் முடியவில்லை.  சிரியாவில் என்றைக்கு பெருநாள் என்றும் தெரியவில்லை.  மதீனாவில் மாதமும் முடியவில்லை எனும் போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் பெருநாள் தினம் என்று முடிவு செய்வதற்கு சாத்தியமே இல்லை.

இதை விளங்கினால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks