Tuesday, July 9, 2013
பள்ளி நிர்வாகிகளுக்கு வஹி வருகின்றதா..?! (ஊர் நடப்பு)
1434 ஹிஜ்ரி வருட நோன்புக்கு பரங்கிப்பேட்டை மக்கள் தயாராகி வரும்
வேளையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.
அது பள்ளியில் நோன்பு திறப்பவர்களுக்கான அறிவுரை.
வேளையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.
அது பள்ளியில் நோன்பு திறப்பவர்களுக்கான அறிவுரை.
எதற்காக இந்த அறிவிப்பு அறிவுரை!?
கொள்கைச் சகோதரர்கள் ஐந்து நிமிடங்கள் முன்பு நோன்பு திறக்கிறார்கள்
என்பதற்காக.
ஐந்து - பத்து நிமிடம் கழித்து நோன்பு திறப்பதால் யாருக்கும் ஒன்றும் குடி
மூழ்கிப் போய்விடாது. இதைக் கொள்கைவாதிகள் அனைவரும் அறிந்தே
வைத்துள்ளார்கள். இருந்தாலும் அவர்கள் ஏன் ஐந்து நிமிடங்கள் முன்பு (பிறர்
பார்வைக்கு பிடிவாதமாக) நோன்பு திறக்கிறார்கள்.
இதை பள்ளி முத்தவல்லிகளும், அறிவிப்பு அறிவுரை செய்பவர்களும் எண்ணிப் பார்க்க
வேண்டும். (எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்)
கிட்டத்தட்ட 9 முதல் 10 மணி நேரம் நோன்பிருப்பவர்கள் ஐந்து நிமிடம்
பொறுக்க மாட்டார்களா..? நிச்சயம் பொறுப்பார்கள். ஆனாலும் ஐந்து நிமிடம்
தாமதிக்காமல் நோன்பு திறப்பதற்கு காரணம் என்ன? அங்கு தான் கொள்கை
மீதான பிடிப்பு அடையாளமாகின்றது (நோன்பு திறப்பதை மட்டும் விரைவு
படுத்தி மற்றவற்றில் கோட்டை விடும் அபாக்கியசாலிகளைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை)
விரைந்து - தாமதிக்காமல் நோன்பை நிறைவு செய்யுங்கள் என்பது நபிவழி.
حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي حازم عن سهل
بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس
بخير ما عجلوا الفطر
விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற நபிமொழி யை ஏற்று, நாம் பலவீனமானவர்கள் அல்லாஹ் சொன்னதற்காக பட்டினி கிடந்தோம். இனி நம்மால் பொறுக்க முடியாது. உன் கட்டளையை ஏற்று நோன்பு திறக்கிறோம் என்று நம் அடிமைத் தனத்தை வெளிபடுத்தி விரைந்து நோன்பு திறக்க கடமைப்பட்ட முஸ்லிம்கள் அப்படியே நிறைவேற்ற வேண்டும்.
"எனக்கு தெம்பிருக்கின்றது நான் இன்னும் 10 நிமிடம் கழித்து நோன்பை திறப்பேன்" என்று யாராவது முடிவெடுத்தால் அது இறைநம்பிக்கையின் செயலல்ல. அது அகங்காரத்தின் வெளிபாடு.
இந்த அகங்காரத்தை பள்ளிகள் தோரும் செய்வார்கள் அதற்கு கொள்கைவாதிகள் கட்டுப்பட்டு போக வேண்டும் என்று ஜமாஅத் அறிவுரை வேறு சொல்கின்றது.
ஜமாஅத்தின் அறிவிப்பை ஊன்றி கவனியுங்கள்.
பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் நேரப்படி, நோன்பு திறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
'சென்ற முறை நாம் கலிமா பள்ளியில் சுன்னா அடிப்படையில் நோன்பு திறந்த போது, பின்புறமிருந்து ஊரறிந்த ஒரு தலைவர் "இவர்களுக்கு வஹி வருகிறதா.. முன்பே நோன்பு திறக்க... இவர்களால் தான் ஊரில் குழப்பம் ஏற்படுகின்றது" என்று குரல் கொடுத்தார். இஸ்லாம் சொல்லியுள்ள வழியில் நோன்பை திறந்ததற்கு கண்டனத்தை பதித்தவர், இப்போது "பள்ளி நிர்வாகம் நேரத்தை தீர்மானிக்கும்" என்று ஜமாஅத் கூறியுள்ளதே... "பள்ளி நிர்வாகிகளுக்கு நேரத்தை தீர்மானிக்க வஹி வருகிறதா...? என்று தனது கண்டனத்தை மீண்டும் ஒரு முறை பதிப்பாரா....
பள்ளி நிர்வாகிகளுக்கு நோன்பு திறக்கும் நேரத்தை தீர்மானிக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்.
அனைத்து பள்ளி கூட்டமைப்பும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தும் கைகோர்த்துக் கொண்டு ஆடும் நாடகமா இது!
குழுமத்தில் சகோதரர் முத்துராஜா பதித்துள்ள சில விளக்கங்களை இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.
***பள்ளி நிர்வாகத்தின் நேரத்திற்கு தான் நோன்பு திறக்க வேண்டும் என்று கட்டளை போடுவதாக இருந்தால் மற்ற ஊரில் உள்ளதுபோல் இது சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் இங்கு தொப்பி அணியாமலோ , விரலை அசைத்தோ , சத்தமாக ஆமீன் சொல்லியோ , தனி ஜமாத்தோ வைத்து தொழ கூடாது
இங்கு நான்கு மத்ஹபை சேர்ந்தவர்கள் மட்டுமே தொழ வேண்டும் என்று அணைத்து பள்ளிகளிலும் போர்டும் வைத்து விடுங்கள் ,,, சபை ஒழுக்கமாக இருக்கும்****
****ஜமாஅத் பைத்துல்மால் நிர்வாகி ஹமீது கவுஸ் கூறுகையில் :
ஜமாஅத் நிர்வாகியான எங்களிடம் கலக்காமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதற்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் ,
வாத்தியாபள்ளியில் இந்த சர்குலரை ஒட்டவும் மாட்டோம் ,, இந்த சர்குலருக்கு கட்டுப்பட்டு நடக்கவும் மாட்டோம் என கூறினார் .******
சுமூகமாக அவரவர் கொள்கைப்படி தொழுகை நோன்பு ஆகியவற்றை செய்துக் கொண்டிருந்தவர்களை வம்புக்கு இழுப்பதாக அமைந்துள்ளது ஜமாஅத்தின் அறிக்கை - அறிவுரை.
முன்பிருந்த ஜமாஅத்தும் இதுபோன்ற சிலவற்றிர்க்கு கருத்து சொல்லி அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் "மஸாயில் விஷயங்களில் இனி ஜமாஅத் தலையிடாது" என்று மக்களுக்கு அறிவித்ததாக நினைவு.
இன்றைய இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சிந்திக்கும் என்று நம்புவோம். .
Labels:
நேரம்,
நோட்டிஸ்,
நோன்பு,
முத்தவல்லிகள்,
ஜமாஅத்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

ஏன் இந்த விதண்டவாதம்?
ReplyDeleteகுழப்பம் கொலையை விட கொடியது அல்லவா, பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த நேரம் தவராவது என்றால் அந்த நேரத்த சரிசெய்து பள்ளி நிர்வாகிகளும் ஏற்றுகொள்ளச் செய்து எல்லா நோம்பாளிகளும் சரியான நேரத்தில் இப்தார் செய்யவைக்கலாமே. அதை விட்டுட்டு, குளப்பம் தான் செய்வேன் என்பது என்ன நாயம்? நபிவழியா பிரசைனை எண்டால் இல்லை, நபிவழியா இர்ந்தாலும் என் இஷ்ட்டப்படி தான் செய்வேன் என்று நினைப்பது தான் பிரச்சினை
---- பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த நேரம் தவராவது என்றால் அந்த நேரத்த சரிசெய்து பள்ளி நிர்வாகிகளும் ஏற்றுகொள்ளச் செய்து எல்லா நோம்பாளிகளும் சரியான நேரத்தில் இப்தார் செய்யவைக்கலாமே.----அபூ ஸாலிஹ்
ReplyDeleteதவறானது என்று தெரிந்தே அதை கடைப்பிடிக்கிறார்கள். கடை பிடித்து விட்டு போகட்டும். அது அவர்களுக்கும் இறைவனுக்கும் உரியது. தங்கள் காரியங்களுக்கு அவர்கள் பதில் சொல்லிக் கொள்வார்கள். பிரச்சனை அதுவல்ல. தவறென்று தக்க ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் "நாங்கள் தீர்மானிக்கும் படிதான் நோன்பு திறக்க வேண்டும்" என்று கட்டளையிடுவது இஸ்லாமிய அதிகாரத்தை கையிலெடுப்பதாகாதா..... இவர்கள் செய்வதுதான் உண்மையான - இறையச்சமற்ற குழப்பம்.
தொப்பி போட வேண்டும். விரலசைக்கக் கூடாது என்று ஆரம்ப காலங்களில் ஆடத்தான் செய்தார்கள். கொள்கைவாதிகளின் உறுதி இவர்களை செயலிழக்க செய்தது. இப்போது மீண்டும் ஆட துவங்கியுள்ளார்கள். ஆனால் இன்ஷா அல்லாஹ் தோற்பார்கள்.
பள்ளியில் கை தட்டி, சால்வை போர்த்தி என்ன அட்டூழியம் நடந்தாலும் அதையெல்லாம் கூடாது என்று சொல்லி தடுக்க முன் வராதவர்களுக்கு இது பெரிய விஷயமாக தெரிவது வியப்பாக உள்ளது.
அல்லாஹ்வின் பள்ளிகளை ஆளும் அரசர்களல்ல பள்ளி முத்தவல்லிகள். இவர்கள் வெறும் ஊழியர்களே.. ஆணையிடும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உண்டு.
அட,
ReplyDeleteஅஞ்சிநிமிசம் லேட்டா தொறந்துட்டா ஒரு சுன்னத்த வுட்டுட்டதா ஆவுது தான்,
ஆனா அதவிட, முந்திக்கறதுங்கற பேர்ல தப்பித்தவறி ரெண்டுநிமிசம் முன்னாடி தொறந்துட்டா நோன்பு வெச்ச்தே வேஸ்ட்டாயிடாதா? முறிஞ்சிடுச்சின்டா அது நோம்பு திரும்பக் கெடக்கிமா?
ஏன் கொளப்புறீங்கமா, உங்கள்க்கு புடிக்கலேண்டா நீங்க நவுந்துபோறது தானே , வீம்புக்கு செய்றது தவ்ஹீதுவாதிக்கு அளஹு இல்லையே.
ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். முற்படுத்தி நோன்பு துறங்கள் என்பது நபிமொழி. நபி(ஸல்) நோன்பு துறக்க முன் கூட்டியே ஏற்பாடு செய்து துறந்துள்ளார்கள். அவர்கள் காலத்தில் சூரியன் மறைந்து விட்டதாக மக்கள் நினைத்து நோன்பு துறந்தார்கள். பிறகு சூரியன் தெரிந்தது. ஆனாலும் அந்த நோன்பு களாவாக்கப்படவில்லை. இந்த விபரங்கள் புகாரியில் பார்க்கலாம்.
ReplyDeleteநீங்கள் தொழுகைகளுக்கு நேரம் தீர்மானிக்கிறீர்கள். சூரிய கணக்கை வைத்துதான். அங்கெல்லாம் இந்த சிந்தனை உங்களுக்கு வருவது கிடையாது. நோன்பிற்கு சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறந்தால் இரண்டு நிமிடம் முன்னால் துறந்தால் நோன்பு முறியுமே.. என்கிறீர்கள். நான் கேட்கிறேன். நீங்கள் தீர்மானித்துள்ள ஐந்து நிமிடம் மட்டும் சரியானது என்று உங்களால் சொல்ல முடியுமா..? எதை வைத்து ஐந்து நிமிடம் கழித்து நோன்பு திறந்தால் நோன்பு கூடும் என்ற முடிவுக்கு வருகிறீர்கள். நீங்கள் எங்களை நோக்கி கேட்கும் கேள்வியை நாங்களும் உங்களை நோக்கி கேட்க முடியும். அதற்கு உங்களிடம் முறையான பதிலிருக்காது.
சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு துறக்க வேண்டும். சூரியன் மறைந்ததை உறுதி படுத்தி நோன்பு துறக்கிறோம். நீங்கள் அது போதாதென்று இன்னும் நேரம் கடத்துகிறீர்கள்.
எதற்காக நகர்ந்து போக வேண்டும் என்கிறீர்கள். அல்லாஹ்வின் பள்ளி அனைவருக்கும் பொதுவானது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? ஒதுங்க வேண்டும் என்கிறீர்கள்? நீங்கள் ஒதுங்கி செல்லுங்கள் என்று நாம் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..?
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் .....
ReplyDeleteநிஜாம் நானா ... முஹம்மத் நபி ( ஸ ல் ) எந்த காலத்துல பள்ளி வாசல்ல வந்து நோன்பு தொறந்தாங்க .....
அவங்க வீட்ல தொறந்துட்டு பள்ளி வாசல்க்கு தொழுகைக்கு தான் வருவாங்க ....
கொள்கை சகோதாரர்கள் அதை பின்பற்றலாமே ........
அதை விட்டுட்டு எங்க அறிவுக்கு நாங்க கஞ்சி காட்சி குடுக்குற நேரத்துல குடிச்சிட்டு போறோம் அங்க ஏன் கொள்கை சகோதரர்கள் வரணும் ....இது அவங்க கொள்கைக்கே தவரானதசே .......
தேவை இல்லாம கஞ்ச குடிச்சு நோன்பு தொரக்கனும்
ரசூல் ஸல் சுன்னாஹ் படி வீட்லய அவங்க நெனச்ச டைம் ல பேரிச்சம் பழம் வச்சு தொரந்துகலாமே
நபி(ஸல்) வீட்டில் நோன்பு திறந்தார்கள், திறக்க சொன்னார்கள் என்பதற்கு ஏதாவது ஹதீஸ் அறிவிப்புகள் இருந்தால் எடுத்து காட்டி விட்டு இந்த வாதங்களை வையுங்கள்.
ReplyDeleteபள்ளிவாசல்களில் நோன்பு திறப்பது சுன்னத்துக்கு எதிரானது என்பதற்கு ஏதும் ஆதாரங்கள் இருப்பின் எடுத்து காட்டினால் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முற்றிப் புள்ளி வைத்து விடலாம். ஜமாஅத்துல் உலமாவிடம் கேட்டாவது ஒரு ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.
கொள்கை சகோதரர்கள் பள்ளிவாசல்களில் வந்து சரியான நேரத்தில் நோன்பு திறப்பது பள்ளி முத்தவல்லிகளுக்கு, ஜமாஅத்துல் உலமாவிற்கு, உங்களைப் போன்றவர்களுக்கு பிரச்சனை. பரங்கிப்பேட்டையில் நடக்கும் வேறு எதுவும் உங்களுக்கெல்லாம் பிரச்சனையாகவே தெரிவதில்லை.
ஒரு ஹதீஸை நடைமுறைப்படுத்துவது உங்கள் அனைவருக்கும் ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது. மார்க்கத்தில் கடுகளவும் ஆதாரமில்லாத எதை செய்தாலும் அனைவருக்கும் சந்தோஷம். அது குறித்து அறிக்கை வராது. விவாதம் நடக்காது, கருத்துக்கள் பதியப்படாது,
எங்கிருந்து இஸ்லாத்தை பார்க்கிறீர்கள் என்பதை விளங்குங்கள் சகோதரரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுவோம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.
நோன்பு திறக்க பேரீத்தப்பழம் அல்லது தண்ணீர் அவ்வளவுதான். திறந்த பிறகு ஹலாலான எதையும் சாப்பிடலாம். கொள்கை சகோதரர்கள் பேரீத்தப்பழத்தால் தான் நோன்பு திறப்பார்கள். அல்லது தண்ணீரால் திறந்து பிறகுதான் கஞ்சி குடிப்பார்கள். (கவனியுங்கள்)
கொள்கை சகோதர்களுக்கு இங்கு கஞ்சி காய்ச்சவில்லை என்று ஏதும் அறிவிப்பு வைத்து விட்டு கஞ்சிக் குடியுங்கள். உங்கள் கஞ்சி சுவையில் பலர் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
Deleteகொல செஞ்சாலும் கொளப்பம் செஞ்சிடாதிங்கண்டு தான் சொல்றொம். அணுகுமொறண்டு ஒண்ணு இக்கிதுல்லோ.
Deleteஒரு ஹதிச நடமுறப்படுத்தறது சந்தோசம். சுன்னத்த ஹயாத்தாக்குறாது நல்லது தான்.அத சமுதாயத்த பொளக்காம செய்ய முடியமாண்டு பாக்கணும். ஆனா, உங்கள்வகிட்ட பேசி ஒண்ணும் ஆவாதுண்டு சொன்னாங்க. அப்புடியில்ல. குத்தாட்டம் போட்ட நாகூர் சாபு பத்தி எளுதினதுக்கு இது எல்க்ட்ரானிக் பொறம் ண்டு கமெண்ட்டு போட்டத மதிச்சி அந்த தனிநபர் தாக்குற பதிவ தூக்கிட்டிங்க. தேங்க்ஸ். ஆனாக்க, அத அந்தப் பதிவுலயே வருத்தம் தெரிவிச்சிந்திக்கலாம்.
நோன்பை முர்படுத்தி திறப்பது நபி வழி இதில் எந்த பள்ளி நிர்வாகத்துடனும் சமரசம் தேவையில்லை,
ReplyDeleteஆனால் வேண்டும்மென்றே குரிப்பிட்ட ஒரு சிலர் குறிப்பிட்டப்பள்ளிகளுக்கு சென்று பள்ளி நிர்வாகத்தையும் அங்குள்ள ஒரு சிலரை அவமானப்படுத்த வேண்டுமென்பது போல செய்வது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது
நோன்பை முர்படுத்த வேண்டும் என்போர் ஏன் கும்மத்துப்பள்ளியை நாடுவது கிடையாது ???
நபி வழி என்னும் போர்வையில் வலம் வருபவர்கல் நடுநிலையோடு நடந்தால் சர்ச்சைக்கு வேலையில்லை என்பது என் கருத்து
நெசமாவே, ஹதீசை ஹயாத்தாக்குற எண்ணம் இருந்தா நிர்வாகிகளை முதலில் தொடர்பு கொண்டு, இப்ப நிர்வாகப்படி நோன்பு திறக்குற நேரம் தப்பு என்று நிருபீச்சிட்டு, ஒரு ஒருமித்த கருத்த உருவாக்க முயற்சி எடுத்திருந்தா பாராட்டலாம். ஆனால் திடிருண்டு வந்து தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன் கணக்கா நடந்துக்கறது தான் தப்பு. சபை ஒழுங்கு இல்லாம போவுது. குரான் ஹதிஸ் விசயத்துல சபை ஒழுங்கு தேவையில்லண்டு அர்த்தம் எடுத்தா, அவங்கவங்க அவங்க புரிஞ்சமாதிரிர்யும், தான்இஷ்டத்துக்கும் நடந்துபாங்க. அப்ப பிரச்சினை தான். அடிதடி தான். அப்ப கலகம் செஞ்சவங்க ஈசியா பெரியாளாயிடுவாய்ங்க, அவங்க அதத்தான் நெனக்கிறாங்களா தெரியல.
ReplyDelete--அன்புச் சகோதரர் SABU நீங்க மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை எழுதுறீங்க. கடந்த பல வருடங்களாக பள்ளி முத்தவல்லிகளிடம் இது பற்றி எடுத்து கூறிக் கொண்டே வருகிறோம். "நீங்கள் என்ன சொல்வது நாங்கள் என்ன கேட்பது..." என்றத் தோரணையில் தான் பள்ளி நிர்வாகங்கள் நடந்துக் கொள்கின்றன. கொள்கைவாதிகள் அனைவரும் ரமளானில் 5 நிமிடங்கள் முன்பே நோன்பு துறப்பாரகள் என்று பள்ளி முத்தவல்லிகள் உட்பட பரங்கிப்பேட்டை மக்கள் அனைவருக்குமே தெரியும். பல ஆண்டுகளாக பள்ளிகளில் அவ்வாறே திறந்து வருகிறார்கள்.
Deleteஅப்போதெல்லாம் இல்லாத அறிக்கை இந்த வருடம் வருகின்றதற்கு என்ன காரணம் என்று நீங்களே அவர்களிடம் கேளுங்களேன்.
இப்போதும் ஒன்றும் குறைந்துப் போய் விடவில்லை. பள்ளி நிர்வாகிகள் சம்மதித்தால் கொள்கை சகோதரர்கள் அவர்களோடு பேசுவார்கள். இதற்கான முயற்சியை நீங்கள் செய்யுங்களேன்.
சபை ஒழுங்கு, பள்ளிவாசல் ஒழுங்கு இதுவெல்லாம் என்னவென்று அறியாமலேயே நிறைய பேர் திடீரென்று சபை ஒழுங்கைப் பற்றி பேசுகிறார்கள். சபை ஒழுங்கு என்றால் இஸ்லாமிய பார்வையில் என்னவென்று முதலில் விளக்குங்கள். புரிந்துக் கொள்கிறோம்.
கலகம் செய்வதற்காக யாரும் இப்படி நடந்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளியாகவே நிற்பார்கள். அது நீங்களாக இருந்தாலும் சரி' நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி்.