Sunday, September 22, 2013

நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

         பரங்கிப்பேட்டையில் வெளியிடப்பட்ட அழைப்புப்பணி நோட்டிஸ்
                          
                    நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?

  • 1) அல்லாஹ்வை மட்டும் நம்பி நேசித்து வாழும் அணியிலா..?
  • 2) அல்லாஹ்வைப் போல பிறறையும் நேசித்து வாழும் அணியிலா..?

இந்த வசனத்தைப் படியுங்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).  (2:165)
  • 1) அல்லாஹ்வின் பாதுகாப்பு போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வின் அடியார்களின் பாதுகாப்பும் வேண்டும் என்கிற அணியிலா?
இந்த வசனத்தைப் படியுங்கள் - சிந்தியுங்கள்

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  (அல்குர்ஆன் 18:102)
  • 1) அல்லாஹ்வை மட்டும் அழைத்தால் போதும் என்கிற அணியிலா?
  • 2) அல்லாஹ்வையும் அழைக்கலாம், அப்துல்காதர் ஜிலானியையும் அழைக்கலாம். தர்காக்களில் அடங்கி இருப்பவர்களையும் அழைக்கலாம் என்கிற அணியிலா?
இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.
அவைனயன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. தெரிவிக்க அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (7:197,198)
  • 1) மரணமே இல்லாத அல்லாஹ்வை மட்டும் நம்பும் அணியிலா..?
  • 2) பிறந்து மரணித்தவர்களையும் சேர்த்து அழைக்கும் அணியிலா..?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

அல்லாஹ்யன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள்.  அவர்களே படைக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இறந்தவர்கள் உயிரோடு இல்லை. எப்போது மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். (16:20,21)

மறுமை நாள் வரை பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைக்கிறார்களே அவர்களை விட வழிகேடர்கள் யார்? தம்மை அழைப்பதை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர். மக்களை ஒன்று திரட்டும் நாளில் இவர்களுக்கு அவர்கள் பகைவர்களாவார்கள் (46:6)

  • 1) அல்லாஹ்வை மட்டும் பாதுகாவலனாக எடுத்துக் கொள்ளும் அணியில் இருக்கிறீர்களா..?
  • 2) அல்லாஹ்வோடு வேறு (அவ்லியாக்களும்) பாதுகாவலர்களும் இருக்கிறார்கள் என்ற அணியில் இருக்கிறீர்களா.?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).(29:41)
  • 1) அல்லாஹ்வின் இந்த சலாலைக் கண்டு அஞ்சும் அணியில் நீங்கள் இருக்கிறீர்களா...?
  • 2) அல்லாஹ்வின் சவாலை ஏற்று தோல்வியுறும் அணியில் இருக்கிறீர்களா...?
இந்த வசனத்தைப் படித்து சிந்தியுங்கள்.

 நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

பரங்கிப்பேட்டையில் ஷிர்க் என்ற இந்த இணைவைப்பை வளர்க்க மீண்டும் சிலர் முயற்சித்து வருகின்றனர்.  தர்காக்களை கட்டி - அலங்கரித்து மக்களை அழைக்க பாடுபடுகின்றனர்.

மரணித்துப் போன யாருக்கும் எந்த சக்தியுமில்லை என்று மேற்கண்ட வசனங்கள் உண்மையை முன் வைக்கின்றன.  அல்லாஹ்வின் வசனங்களை நம்பும் மக்களாக நாம் இருந்தால் இத்தகைய தர்கா - மெளலீது வழிபாடுகளை அடியோடு துடைத்தெரிய பாடுபட வேண்டும்.

இணை வைத்தலின் சாயல்கள் நம்மிடம் இருக்கும் போது நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதில் அல்லாஹ்விடம் எந்த பலனும் கிடைக்காது.

இணை வைக்கும் நிலையிலேயே பலர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக்  கொள்கிறார்கள் என்று இறைவன் (12:106) வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இது ஈமானுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாகும்.

இந்த வசனத்தை படித்து சிந்தியுங்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.(6:82)

தர்காக்களை, தாயத்துகளை, மந்திரித்தளை, மடடைகளை முற்றிலுமாக ஒதுக்கி,  இவற்றை மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டி இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.








No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks