Monday, May 13, 2013

வளரும் ஷியாயிஸம் - வளர்க்கும் உலமாக்கள். (ஊர் நடப்பு)


ஷிர்க், பித்அத் போன்ற அனாச்சாரங்களுக்குள் மீண்டும் பரங்கிப்பேட்டையை கொண்டு வரும் தீவிர முயற்சி ஜமாஅத்துல் உலமா உதவியுடன் நடந்து வருவதை நாம் சுட்டிக் காட்டி வருகிறோம்.
 
வாத்தியாப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள காஜா மேடை என்ற காற்று வாங்கும் மேடை ஒருகாலத்தில் மெளலிது மேடையாக கிடந்தது.  குறிப்பிட்ட மாதத்தில் மெளலீது ஓதப்பட்டு மெளலீது முடிவு நாட்களில் வெளியில் மேடையை ஒட்டி மேலும் ஒரு மேடை அமைத்து பாட்டுக் கச்சேரியுடன் ஏக போக விழாக் கொண்டாடுவார்கள். 80களின் இறுதி வரை நடந்து வந்த இந்த ஷியாயிஸ கொள்கை குர்ஆன் ஹதீஸ் கொள்கையின் தீவிரத் தாக்கத்தால் விரைவிலேயே மாண்டுப் போனது. 

மெளலீது ஓதுபவர்களிடமும், அதற்காக பாடுபடுபவர்களிடமும் எழுப்பப்பட்ட இஸ்லாமிய கேள்விகளால் சிலர் ஓடி ஒளிந்தனர், சிலர் சிந்தித்துத் திருந்தினர். காலங்கள் மாறியது. 

இஸ்லாமிய அழைப்பின் தாக்கம் குறைந்தது அல்லது அடியோடு நின்றது. இந்த நேரத்திற்காக காத்து கிடந்த ஷெய்த்தான் மீண்டும் தனது ஆதிக்க வலையை விரிக்க தயாராகிவிட்டான்.
 

ஷியாயிஸம் துளிர்விடத் துவங்கி விட்டன.  மெளலவி என்றப் பெயரில் மார்க்கம் அறியா மனிதர் மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் துணைத்தலைவராக இருந்துக் கொண்டு ஷியாயிஸத்தை சீராட்டி வளர்த்து வருகிறார்.

காஜா மேடையில் கொடியேற்றப்பட்டு மெளலீது பாடல்களை பாடத் துவங்கி விட்டனர்.

அன்றைக்கு விரல்விட்டு எண்ணும் அளவிற்கே கொள்கைவாதிகள் இருந்தனர். உளத்தூய்மையும் பிரச்சாரக் கடமையும் மிகைத்து நின்றதால் அசத்தியம் அழிவை நோக்கி மிரண்டு ஓடியது.
 
இன்றைக்கு கொள்கைவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உளத்தூய்மை - பிரச்சார கடமை எங்கே என்று கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்.

எங்கே செல்கின்றது பரங்கிப்பேட்டை என்ற கேள்வியை மீண்டும் முன் வைக்கிறோம்.
மெளலீது வரிகளை நினைவூட்டுகிறோம்.  இறை நம்பிக்கைக் குறித்து அக்கறையுள்ளோரே.... சிந்தியுங்கள். சிந்திக்கத் தூண்டுங்கள்.
ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை ஆராயுங்கள்.
كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
 
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!

'யா நபி (நபியே!)' என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.
 

يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ
 
குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!'

சல்லூ அலாகைரில் இபாத்' என்ற பாடலின் சில வரிகள் இவை.
 

وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ
 
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
 
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
'நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்'

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ

'நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது'
 

وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ
'(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!'

بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ
اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ
فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ
وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ
எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன். 
உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.
இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.
என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!
மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!
உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!
உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!

اِنَّا بِهِ نَسْتَجِيْر
فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.
 
அன்புச் சகோதரர்களே..  நாம் மெளலீதின் இந்த வரிகளுக்கு இது எவ்வாறு தவறு என்று விளக்கம் எழுதவில்லை.  சாதாரணமாக படித்து சிந்தித்தாலே இதன் ஈமானை பாழாக்கும் பாரதூரமான அபாயம் புரிந்து விடும். 

அல்லாஹ்வின் கலாமான புனிதக் குர்ஆனுக்கும் மேலாக மதிக்கப்படும் இந்த மெளலீது பாடல் புத்தகங்களை நாம் அனுமதிக்கலாமா...? பங்கேற்கலாமா..? வளர விடலாமா...? கண்டுக் கொள்ளாமல் இருக்கலாமா...? என்பதை புரியுங்கள் - முடிவெடுங்கள்.



 

 

 
 


5 comments:

  1. யாஅல்லாஹ் மீண்டுமா.........
    இதற்கு ஊரில் உள்ள இஸ்லாமியர்கள் உடனே ஆக்ஷ்ன் எடுக்கனும்.

    ReplyDelete
  2. யோவ் என்ன கலவரத்த தூண்டி விட பிளான் பண்றியா?

    மொதல்ல நீங்க திருந்த பாருங்க.. அப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம்.

    உமக்குத்தான் பரங்கிப்பேட்டை ஆளே இல்லையே. அப்புறம் என்னா ...க்கு இந்த ஆள் சேக்குற வேல?

    ReplyDelete
  3. Dai Naye sirkai kandipavargalai patri pesa unaku enna thaguthi erukuda kottathil jaalra podubavane thunichal erunthaal poye nizama neril kandu vilakam kel. Yaarukuda aal ellai thouhid pesa aal thevai ellai da allahudayathunai pothum enga nizam alavirku oru thappai ne thehiriam erunthal kandithu paar ne bayanthakoli athanalathan un peyara koda podala. Sirkai kandika thoppu ellai puram mattum pesa theriuthu. Inshaallah meendum parangiyil oru thouheed puratchi vedikum appa vanthu pesu. Petar podatha payaluku en peyarai solla virupam ellai thouba sai nizamai kurai solvathaga ninaithu allahuku inaivaithu mandayapodatha.

    ReplyDelete
    Replies
    1. என்ன குநி கட்சிக்கு ஆள் சேக்குறீங்களா?

      யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க

      Delete
  4. Dear Anonymous

    Kindly, Respect to others, in your way of speaking is not our loveable Propher Muhammed (PBUH) ways,, In way of Islam moulith is strictly prohibited,,

    Rgds

    Mohammed Ali S/o Jamaludeen Maricar

    ReplyDelete

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks