Sunday, June 23, 2013

"பிறை" குழும கருத்துப் பரிமாற்றங்கள் (பகுதி - 1)


வாசக அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஹிஜ்ரி 1433 வருடத்தின் ஹஜ் பெருநாள் தொழுகையை நாம் அல்லாஹ்வின் ஏற்பாடான சந்திரனின் கணித அடிப்படையில் தொழ வைத்தோம்.  இது பரங்கிப்பேட்டையில் மிகப்பெரிய விமர்சன அலைகளை ஏற்படுத்தியது. 
 
தொடர்ந்து ஊருக்காக இயங்கும் பொது குழுமங்களில் இது பற்றிய கருத்தாடல்கள் துவங்கின.  அந்தக் கருத்தாடல்களில் மார்க்கம் கடந்த வெத்து எழுத்துக்களையும். தலைப்புக்கு சம்தமில்லாமல் வந்த பதிவுகளையும் நீக்கி விட்டு ஆதாரங்களின் மீது தொடர்ந்த அறிவார்ந்த விளக்கங்களை நம் தரப்பு வாதங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.  ஆதாரங்களை பரிசீலித்து கருத்திட்ட சகோதரர்களுக்கு நல் கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.
 
கருத்துரைகளில் கலந்துக் கொண்டு சுயமாக சிந்தித்து தங்களின் தெளிவுரைகளை முன்வைத்த சகோதரர்கள் அனைவரின் எண்ணமும் இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருப்பதை இதைப் படிப்பவர்கள் விளங்கலாம்.
 
இந்த தொகுப்பு சற்று நீளமாக இருந்தாலும் ஆதாரங்களும் அதன் மீதான வாதங்களும் அறிவார்ந்த நிலையில் இருப்பதால் சகோதர - சகோதரிகள் நேரமெடுத்து நிதானமாக படித்து கருத்துக்களை மனதில் பதித்தால் பிறைக் குறித்த அறிவைப் பெற வாய்ப்புள்ளது.
 
அல்லாஹ் அவனது மார்க்கத் தெளிவைக் கொடுக்க அவனிடம் தொடர்ந்து பிரார்த்திப்போம். - ஜி.என்
 
 
 
அன்பு சகோதரர் நிஜாம் அவர்களுக்கு ஸலாம்,
 
நமது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கிடையே , முன் காலங்கள் தொட்டு 2 விதமான கருத்துக்கள், பிறை விஷயத்தில், ஹதீஸ் ஆதாரத்தின் படி இருந்து வருகின்றது . இது வெறும் கருத்து வேறுபாடே தவிர , இதனால் முஸ்லிம்களின் கடமைகளின் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் எந்த ஒரு பாதிப்பும் வந்ததில்லை. 

1. முழு உலகிற்கும் ஒரே பிறை - எங்காவது ஒரு இடத்தில் பிறை பார்த்தல் அதனை கொண்டு அணைத்து உலக முஸ்லிம்களும் பின்பற்றலாம்.
 
2. பகுதி பிறை  - அந்த அந்த பகுதியில் பிறையை பார்த்து , அதன் படி , அங்குள்ள முஸ்லிம்கள் ரமலான் மற்றும் ஹஜ் பிறையை கணக்கிடுவது.
 
இந்த இரண்டு கருத்தின் படி தான் , இவ்வளவு காலமாக அணைத்து முஸ்லிம்களும் , அவர் அவரின் புரிதலின் படி பிறையை கணக்கிட்டு இபாதத் செய்து வந்தார்கள் . இந்த 2 முறையில், எந்த முறையை பின்பற்றினாலும் ஹஜ் செய்வதில்  தவறு வராது.
 
சவுதி அரேபியா பாத்வா கவுன்சில் அறிவித்த பிறையை ( முழு உலகிற்கும் ஒரே பிறை ) என்ற முறையை பினப்ற்றுபவர்கள் , ஹஜ்ஜுடைய காலங்களில் பிறை 9 இல் அரபாவில் இருப்பார்கள்.
 
பகுதி பிறையை பின்பற்றுபவர்கள் , தாம் வாழும் இடத்தின் பிறைக்கு ஒப்ப , ஹஜ்ஜுடைய காலங்களில் சவுதி அரேபியாவின் பிறைக்கு ஒப்புதல் அளித்து ஹஜ் பிறை 9 இல் அரபாவில் இருப்பார்கள் . ஆகவே அணைத்து ஹாஜிகளுடைய ஹஜ்ஜும் எந்த வித குழப்பமும் இல்லாமல் அல்லா நாடினால் ஒப்புக்கொள்ளப்படும்.
 
நீங்கள் கூறும் நவீன விஞ்ஞான அறிவியல் மூலம் பிறையை துருவி கண்டு பின்பற்றுபவர்கள் , உலகில் வாழும் எந்த நாட்டு முஸ்லிம்களுடனும் ஒத்துபோகமாட்டார்கள் , மேலும் ஹஜ்ஜுடைய காலங்களில் அவரால் ஒரு அமீருக்கு கட்டுப்பட்டு , பிறை 9 இல் , 30 லட்சம் ஹாஜிகளில் ஒருவராக ,அரபா மைதானத்தில், பாவ மன்னிப்புக்காக அழுது துவா செய்து , இமாம் கொடுக்கும்  குத்பா உரையில் நிற்க முடியாது. ஏன் என்றால் , அன்றைய தினம் உங்களுக்கு ஹஜ் பிறை 10 , ஈதுல் அத்ஹா உடைய நாள்.
 
 எவர் ஒருவர் ஹஜ் பிறை 9 இல் அரபாவில் நிற்க வில்லையோ , அவருடைய ஹஜ் ஒப்புக்கொள்ளபடாது என்று நபி ஸல் அவர்கள் அறிவித்து உள்ளார்கள்.
 
அறிவியலும் , நவீன விஞ்ஞானமும் மனிதனால் சமீபகாலமாக  கண்டுபிடிக்கப்பட்டது . இதனை ஆதாரமாக வைத்து, இஸ்லாமிய சட்டங்களை அதற்க்கு தகுந்தார் போல் வளைத்தல் ஆகாது . நவீன அறிவியலையும், விஞ்ஞானத்தையும், இஸ்லாத்திற்கு தகுந்தாற்போல் வளைத்தால் தான் , அறிவியல் வெற்றி பெரும்
 
எப்போது வேண்டுமென்றாலும் நவீன விஞ்ஞானம் U  டர்ன் எடுத்து தவறான ஒன்றை அறிவித்துவிடும், இதற்கு ஊதாரணம் , உலகம் உருண்டை என்று அறிவியல் முதலில் அறிவித்தது . முஸ்லிமாகிய நாம் , அல்லாஹ் கட்டளை இட்டதையும்,  நபி ஸல் சொன்னதையும் , செய்ததையும் " சமீய்னா வாதாஅனா "  "கேட்டோம் , பணிந்தோம்" என்று சஹாபா ரலியல்லாஹு அன்ஹு போல் செய்தால் தான் இம்மையிலும் மறுமையிலும் , பித்னாக்களை புறக்கணித்து வெற்றி பெற முடியும்.
 
நபி ( ஸல் ) பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் , பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறினார்கள் . அறிவியலின் நோக்கில் பிறையை பாருங்கள் என்று கூற வில்லை . அவ்வளவு தான் . அதோடு நாம் முடித்துக்கொண்டு , கேட்டோம் பணிந்தோம் என்று அமல் செய்து கொண்டு போகவேண்டும் . நபியின் காலத்தில் நாம் உபயோகிக்கும் சந்திரனை கூர்ந்து பார்க்கும் கருவியோ அல்லது இன்டர்நெட்டோ இல்லை , தன்  கண்ணால் பார்ப்பதை வைத்து அறிவிப்பு செய்து அமல் செயுங்கள் என்று சொன்னார்கள்.  அதற்க்கு பதிலாக , நவீன கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தை வைத்து , சரியாக துல்லியமாக பார்க்கின்றேன் என்று கருதி, நபியின் ஹதீஸை நவீன விஞ்ஞானத்தை வைத்து ஆராய்ந்தால் , அது தவறான வழியில் நம்மை இழுத்துச்சென்று , குFப்ரில் தள்ளிவிடும்.
 
ஒரு பெண்ணுடைய கணவன் இறந்து விட்டால் , அவரின் மனைவி 4 மாதம் 10 நாள் இத்தா  நிலையில் இருக்க வேண்டும், அதாவது , எந்த ஒரு அந்நிய ஆணுடனும் பேச்சுவார்த்தை , பழக்க வழக்கம் , மறு திருமணம் போன்று எந்த ஒரு செயலும் செய்தல் கூடாது .  அந்த நிலை கழிந்து தான் அந்த பெண் வேறொரு திருமணம் செய்ய நாடினால் செய்ய வேண்டும்  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.  இது இஸ்லாமிய சட்டம்
 
இதற்கு அந்த காலத்து பல அறிவியல் அறிஞர்கள் அவர்களின் சிந்தனைக்கு ஏற்றார் போல் பல வாறான விளக்கம் கொடுத்தார்கள் . அதில் முக்கியமான ஒன்று, அந்த 4 மாதம் 10 நாளில் , அவள் கர்ப்பம் அடைந்து இருக்கின்றாளா , இல்லையா என்று மிக துல்லியமாக தெரிந்துவிடும் என்று அன்றைய அறிவியலும் , விஞ்ஞானமும் கூறியது . அப்போதைய நவீன விஞ்ஞானம் இஸ்லாமிய சட்டத்தை அங்கீகரித்தது.
 
அனால் முஸ்லிமாகிய நாம் , அறிவியலும் , விஞ்ஞானமும் அங்கீகரித்தாலும்  , இல்லாவிட்டாலும் , கியாமதுடைய நாள் வரை , கணவன் இறந்தால் , மனைவி 4 மாதம் 10 நாள் இத்தாவில் இருந்தே ஆகா வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தை பேணியே ஆகா வேண்டும் .  அறிவியல் அங்கீகரிப்பதால் தான் அந்த சட்டத்தை பேணுவேன் என்று நினைத்தால் , இப்போது உள்ள நவீன விஞ்ஞானம் , ஒரு பெண் கருவுற்று இருக்கிறாளா என்பதை பார்க்க , கணவன் மனைவி உடலுறவு கொண்ட அடுத்த நிமிடமே , மனைவியின் இரத்தத்தை பரிசோதனை செய்தால் தெரிந்துவிடும். அப்போது நவீன அறிவியல் ஆதாரங்களின் படி 4 மாதம் 10 நாள் இத்தா இருக்க தேவை இல்லை என்று எடுத்தாள் , இஸ்லாத்தின் சட்டம் அனைத்தும் புறக்கணித்து , வழிகேட்டில் தள்ளப்பட்டுவிடுவோம் அல்லவா !!..
 
அதே போல் தான் , இஸ்லாத்தை வைத்து நவீன விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டுமே தவிர , நவீன விஞ்ஞானத்தையும் , அறிவியலையும் வைத்து புதிய இஸ்லாமிய மார்க்க சட்டங்களை உருவாக்க கூடாது.
 
கண்டிப்பாக, சிந்தித்து , அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான் . செய்யத் உமர்
 
*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*
 
ஸலாம்.
 
அன்புச் சகோதரர் செய்யத் உமர் அவர்களுக்கு,
 
ரப்புல் இஸ்ஸா அவன் மார்க்கத்தை அறியும் விஷயத்தில் நம் எண்ணங்களை தூய்மையாக்கி வைக்கட்டும். உண்மையில் பிறைப் பற்றிய கலந்தாய்வு அவசியம் என்றே நாம் கருதுகிறோம்.   
 
இறைவன் தொழிற்நுட்பத்தை வெளிபடுத்திக் கொடுக்கும் போதெல்லாம் அதை நாம் அனுபவித்துதான் வருகிறோம். மார்க்க நிலைப்பாட்டிற்கும் அதை பயன்படுத்தத்தான் செய்கிறோம்.  தொழுகை நேரங்களை வாட்ச், சுவர் கடிகாரங்கள் போன்ற தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி அறிவது, பாங்கு சொல்வது, பல ஆண்டுகளுக்கான தொழுகை நேரங்களை முன் கூட்டியே அச்சிடுவது உட்படவும்,  நபி(ஸல்) பெருநாட்களில் ஆண்கள் பெண்களுக்கென்று இரண்டு உரைகள் நிகழ்த்தியுள்ள போதும் ஒலி பெருக்கி என்ற தொழிற்நுட்பத்தால் அதை ஒரு உரையாக நாம் ஆக்கிக் கொண்டது உட்பட வணக்க வழிபாடுகளுக்கும் நாம் தொழிற்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.
 
இன்னும் சொல்லலாம்.
 
நபி(ஸல்) காலத்தில் போருக்கு சென்றவர் மரணமடைந்தால் மீண்டும் அவர்கள் சொந்த இடத்திற்கு வந்த பிறகே மரணித்தவரின் மனைவிக்கு தகவல் கிடைத்து மனைவி இத்தாவை துவங்க முடியும் அதுதான் அவர்கள் கால நடைமுறை, இன்றைக்கும் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு நம்மூரிலிருந்து ஹஜ் சென்றவர்கள் மரணித்தாலும் இதே நிலவரம் தான் ஆனால் இன்றைக்கு தொழிற்நுட்பத்தால் அடுத்த நிமிடங்களில் அனைத்தும் அறியப்பட்டு விடுகின்றது.  அனுபவித்துக் கொள்கிறோம். 
 
ஆனால் பிறை விஷயத்திற்கு மட்டும் தொழிற்நுட்பம் வேண்டாம் என்கிறோம்.   இரட்டை நிலைப்பாடு ஏன் என்பதுதான் புரியவில்லை. 
 
****அறிவியலும் , நவீன விஞ்ஞானமும் மனிதனால் சமீபகாலமாக கண்டுபிடிக்கப்பட்டது . இதனை ஆதாரமாக வைத்து , இஸ்லாமிய சட்டங்களை அதற்க்கு தகுந்தார் போல் வளைத்தல் ஆகாது  நபி ( ஸல் ) பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் , பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறினார்கள் . அறிவியலின் நோக்கில் பிறையை பாருங்கள் என்று கூற வில்லை . அவ்வளவு தான் . அதோடு நாம் முடித்துக்கொண்டு , கேட்டோம் பணிந்தோம் என்று அமல் செய்து கொண்டு போகவேண்டும் . நபியின் காலத்தில் நாம் உபயோகிக்கும் சந்திரனை கூர்ந்து பார்க்கும் கருவியோ அல்லது இன்டர்நெட்டோ இல்லை , தன் கண்ணால் பார்ப்பதை வைத்து அறிவிப்பு செய்து அமல் செயுங்கள் என்று சொன்னார்கள். அதற்க்கு பதிலாக , நவீன கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தை வைத்து , சரியாக துல்லியமாக பார்க்கின்றேன் என்று கருதி, நபியின் ஹதீஸை நவீன விஞ்ஞானத்தை வைத்து ஆராய்ந்தால் , அது தவறான வழியில் நம்மை இழுத்துச்சென்று , குFப்ரில் தள்ளிவிடும்**** செய்யத் உமர்
 
ஆதாரங்களை முழுமையாக அலசி கருத்திடுவதே சிறந்ததாகும்.  அறிவியலை நபி(ஸல்) முற்றாக புறக்கணிக்க சொன்னது போன்று, அல்லது அவர்களே புறக்கணித்தது போன்று உங்கள் வாசகம் அமைகின்றது.
 
அறிவியல் என்பது அல்லாஹ்வின் செயல் அதை உண்மைப்படுத்துவது நபித்துவத்தின் பொறுப்பாகும். வானங்கள் பற்றியும், சூரிய சந்திரன் பற்றி அல்லாஹ் எங்கெல்லாம் பேசுகின்றானோ,  அவர்கள் சிந்திக்க மாட்டார்களா, ஆய்வு செய்ய மாட்டார்களா, அவர்களுக்கு அவற்றில் அத்தாட்சி இருக்கின்றன என்று எங்கெல்லாம் கேட்கின்றானோ அவை நம்பிக்கையையும் அறிவியலையும் சார்ந்த வசனங்களாகும்.  அல்லாஹ் அறிவியல் பற்றிய அறிவை அன்றைக்கு எந்த அளவிற்கு வெளிபடுத்திக் கொடுத்தானோ அது அன்றைக்கு உண்மைப்படுத்தப்பட்டது.  வெளிபடுத்தப்படாதவற்றிர்க்கு அன்றைக்குரிய நடைமுறையைக் கையாண்டார்கள்.    
 
கீழேயுள்ள நபிமொழியைப் படியுங்கள்.  இது புகாரியில் நோன்புப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது.
 
 حدثنا آدم حدثنا شعبة حدثنا الأسود بن قيس حدثنا سعيد بن عمرو “-” أنه سمع ابن عمر رضي الله عنهما  عن النبي صلى الله عليه وسلم أنه قال إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا وهكذا يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين
 
நாம் உம்மி சமுதாயம்.
எழுதவும் தெரியாது
விண்கலையும் தெரியாது
மாதம் சில வேளை 29 நாட்களைக் கொண்டது
சில வேளை 30 நாட்களைக் கொண்டது.
 
எழுதப்படிக்கத் தெரியாத நபி, எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தைப் பற்றி இங்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.  நமக்கு எழுதப்படிக்கத் தெரியாது வானவியலும் தெரியாது. சந்திர மாதம் 29 ஆகவும், 30ஆகவும் இருக்கும் என்கிறார்கள்.
 
வானவியல் தெரியாது என்று சொன்ன நபியவர்கள் வானவியல் தேவையில்லை என்று சொல்லவில்லை.  அன்றை்ககு அவர்களுக்கு அது தெரியவில்லை.  வானவியல் தெரிந்து அதை நபி(ஸல்) புறக்கணித்திருந்தால் மட்டுமே இன்றைக்கு பலரும் எடுத்து வைக்கும் வாதம் நியாயமானதாக இருந்திருக்கும்.    நமக்கு அது தெரியாது என்பதால் "பாருங்கள்" என்று கூறி தீர்வு வழங்கியுள்ளார்கள். 
 
வானவியல் தெரிந்து அதை புறக்கணித்து கண்களால் பார்க்க சொன்னார்கள் என்று ஏதாவது ஆதாரமிருந்தால் எடுத்துக் காட்டுங்கள். 
 
செவியேற்றோம் கட்டுப்பட்டோம் என்று கூறுவது ஒன்றை உறுதிப்பட அறிந்துக் கொள்வதற்கு முரணாகாது. இப்ராஹீம் நபியவர்கள் "உயிர்பிப்பது எப்படி என்று அறிய வேண்டும் என ரப்புவிடம் கேட்டு அறிகிறார்கள். அவர்களின் இச்செயல் "செவியேற்றோம் கட்டுப்பட்டோம்" என்பதற்கு முரணானது என்று எந்த முஸ்லிமும் கருத மாட்டார்.
 
 இந்த கருத்தாடலில் முதல் பிறையைப் பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறும் சகோதரர்களிடம் நாம் பல கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.  முதலில் அறிவியல் உண்மைகளை ஏற்கலாமா... புறக்கணிக்கலாமா.. என்பது குறித்து ஒரு நெருக்கமான முடிவுக்கு வருவோம்.  
 
அமைதியாகவும் - நிதானமாகவும் இரு தரப்பு வாதங்களையும் குழும சகோதரர்கள் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கு மார்க்க விளக்கத்தைக் கொடுக்கட்டும்.
 
(குறிப்பு:_ இத்தா சட்டம் இந்த தலைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் அது குறித்து இங்கு கருத்திடவில்லை)
 
*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
 
அஸ்ஸலாமு அழைக்கும்
 
நாம் உம்மி சமுதாயம்.எழுதவும் தெரியாது விண்கலையும் தெரியாது என்ற ஹதீஸின் இந்த வாசகம் அன்று வாழ்ந்த ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் குறிக்காது நிஜாம் நானா, நபி ஸல் அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது அவ்வளவு தானே தவிர அன்றும் பல துறைகளின் நுணுக்கங்கள் அறிந்த மக்கள் வாழத்தான் செய்தனர் என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். மேலும் பார்த்து என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் இருக்க அதை கொண்டு செயல்படுதல் தானே சிறந்தது, பார்க்கமுடியாத ஒன்றா முதல் பிறை? சகோ.பைஸல்
 
*/*//*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
 
அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ
 
இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இந்த உலகத்தில் இருந்து கொண்டு இருக்கும் போது பிறை பற்றிய ஒரு ஆய்வு இன்று தேவையா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறிய நேரத்தை நாம் இதற்காக ஒதுக்கி குரானுக்கும் சுன்னாவிற்கும் உட்பட்டு நமது கருத்துகளை  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன் (விளக்கம் வேண்டி). அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தை தருவானாக.
 
பிறையை கண்களால் காணவேண்டும் என்று கூறுபவர்கள் அல்லாஹ் அறிவிக்க கூடிய அதனுடைய படித்தரங்களை பற்றி கண்டு கொள்ளாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று நான் கருதுகின்றேன். உதா. ஒவ்வொரு ரமளானிலும்  நண்பர்களுடன் கூட்டாக பிறையை பார்த்துவிட்டு திரும்பும் பொது இது இரண்டாம் பிறை போலே இருக்கு அல்லது 3 ஆம் பிறை போலே இருக்கு என்று பேசி கொள்வது நாம் அனைவரும் அறிந்தததே.  அதே நிலை தான் இன்றும் இருகின்றது. ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்.
 
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (10:5)
 
நமக்கு அல்லாஹ் பிறையின் படித்தரங்களை தான் நாட்களுக்கான தேதி என அறிவிகின்றானே தவிரே கண்ணால் காணும் போதுதான் தேதி / மாதங்களை ஆரபிக்கவேண்டும் என்று சொல்ல வில்லை.
 
நபி (ஸல் ) அவர்களும் "நாம் உம்மி சமுதாயம் எழுதவும் தெரியாது வின்கலையும் தெரியாது மாதம் என்பது சில வேலை 29 நாட்களாக இருக்கும் அல்லது சில வேலை 30 நாட்களாக இருக்கும்" (இது போன்றோ அல்லது இதைவிட கூட அல்லது குறைய கூறினார்கள்) என்று கூறியதாக நாம் அறிகின்றோம். கண்டிப்பாக அல்லாஹ்  கூறுகின்ற பிறையின் படித்தரங்களை   வைத்துதான்  நபி ஸல் அவர்கள் கூறியிருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் தற்போது உள்ள பொளிஷன் நிறைந்த கால கட்டத்தில் நாம் பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினம் / குறைந்தது பிறை பிறந்து 24 மணிநேரமாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால் இதே பிறையை நபி (ஸல் ) அவர்கள் காலத்தில் கண்ணால் பார்க்க வாய்ப்புகள் அதிகம்.  அன்றைய வானிலை இன்று இருக்கின்ற மாதிரி இவ்வளவு மோசமாக இல்லை. பிறையின் ஆரம்ப படிதரம் முதல், அல்லாஹ் கூறும் 36:39 (உர்ஜீனல்  கதீம் ) கடைசி படிதரம் வரை கண்ணால் பார்க்க வாய்ப்புகல் இருந்தது.
 
படித்தரங்களை பார்பதுதான் அல்லாஹ்வும் நபி ஸல் அவர்களும் கற்று கொடுத்த வழிமுறையாக இருக்கும். அப்படி இல்லை என்றால் அல்லாஹ் அமைத்து கொடுத்த படிதரங்களின்  அவசியம் என்ன ?   சூரியன் போல சந்திரனும் எப்போதும் தன்னுடைய முழு வடிவத்தில் அமைக்க பட்டுயிருகலாமே ! " அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (10:5)
 
இதனால் தான் இது குறித்து ஆரயாவேண்டி இருகின்றது சகோதர்களே.
 
பிறையை கண்களால் பார்த்த பிறகுதான் மாதத்தை துடங்க வேண்டும் என்று கூறுபவர்கள் அல்லாஹ்  கூற கூடிய பல படித்தரங்கள் பற்றிய நிலை என்ன ? (விளங்கி கொள்வதற்காக வேண்டி ) ?
 
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.. தவறு  இருப்பின் மன்னிக்கவும்

குரான் சுன்னா அடிப்படையில் கற்று அறிந்து அதன்படி அமல்கள் செய்ய அல்லாஹ் நம் அனைவர்  மீதும் அருள் புரிவானாக. சகோ. மரகச்சி
 
*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
 
அன்பு சகோதரர்கள் மறைக்கச்சி மற்றும் நிஜாம் அவர்களுக்கு ஸலாம் ,
 
நமக்குள் மார்க்க விஷயங்கள் கருத்தாடலின் போது கலந்துரையாடப்படும் விஷயங்கள் எதுவும் இப்போது தேவை தானா அல்லது தேவை இல்லாதது என்று  ஒதுக்கி  விட முடியாது . நமக்கு  முன் மாதிரியான நபி ஸல் அவர்களும் சஹாபா ரலியள்ளஹு அன்ஹு அவர்களும் இஸ்லாத்தின் எல்லா துறையிலும் தன்னுடைய நேரங்களை செலவழித்து வந்தார்கள் .
 
1. அறிய விரும்புபவர்களுக்கு மார்க்க சட்டங்களை எடுத்துரைப்பது ,
 
2. மார்க்க சட்டங்கள் கறப்பது , அதன் படி அமல் செய்வது .

3. குரானை மனனம் செய்வது
 
4. நபி ஸல் அவர்கள் செய்ததையும் , சொன்னதையும் , ஹதீஸ்களாக கோர்வை செய்வது . 
 
5. இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துரைப்பது .
 
6. இஸ்லாம் அனுமதித்த படி வியாபாரம் செய்து தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு வழிவகுத்து கொள்வது .
 
7. இஸ்லாமிய ஆட்சியை எப்படி உலகெங்கும் பரவ செய்வது என்பதை சிந்திப்பது .
 
8. அதற்க்கு உண்டான இஸ்லாமிய ராணுவத்தை தயார் செய்து , அப்போதைய உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வந்த மிக சக்தி வாய்ந்த மன்னர்களான ரோமர்களுக்கும் , பாரசியர்களுக்கும் , கிருத்துவர்களுக்கும் , அல்லாஹ் குர்ஆனில் கட்டளை இட்டபடி , இஸ்லாத்தை தழுவி உலகெங்கும் ஒரு தலைவருக்கு கீழ் ஆட்சி செய்ய கூறி அழைப்பு விடுவது , மறுப்பவர்களை கட்டயாப்படுத்தாமல் , ஜசியா  என்னும் வரி செலுத்தி இஸ்லாமிய ஆட்சியின் கீழ்  முழு பாதுகாப்புடன் வாழ அனுமதிப்பது , அதையும் மறுத்தவர்களை அல்லாஹ்  குர்ஆனில் கட்டளை இட்டபடி அவர்களிடம் போர் புரிந்து , இஸ்லாமிய ஆட்சியை ஆங்கங்கே நிலை நிறுத்தி , இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி அமைப்பது .
 
இது போன்றவாறு சஹாபா ரலியள்ளஹு அன்ஹு அவர்கள் அணைத்து துறையினிலும் தனது கவனத்தையும் மேலும் தனது முழு நேரத்தையும் செலவளித்ததால்தான் நாம் இன்று முஸ்லிம்களாக இருக்கின்றோம் . அல்ஹம்துலில்லாஹ் .
 
கலந்துரையாடுவது , நமக்குள் உள்ள குழப்பம் நீங்கி, சிந்தனையை தூண்டி விளக்கம் பெறுவதற்கே தவிர , இதனால் முஸ்லிம்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துதல் அறவே ஆகாது . இது போன்று பிரிவினையை தான் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது .
 
அபு ஹுரைரா , இப்னு அப்பாஸ் , இப்னு உமர் ( ரலியள்ளஹு அன்ஹு ) போன்ற மாபெரும் சஹாபாக்கள் அறிஞர்களிடம் கூட , நபியின் சுன்னத்தை அறிவிப்பதில் பல மாதிரியான கருத்து வேறுப்பாடுகள் இருந்ததே தவிர , அந்த கருத்து வேருப்பாடினால் ஒரு போதும் முஸ்லிம்களிடம் ( இமான் கொண்டவர்களிடம் ) பிரிவினை வந்ததில்லை .  அவர் அவர்களின் புரிதலின் பெயரில் அமல் செய்ய தொடங்கிவிடுவார்கள், மேலும் நபி ( ஸல் ) அனைத்தையும் அங்கீகரித்தார்கள்.
 
அனால் இப்போது நமக்குள் உருவாகும் பிரிவினை , நபியின் சுன்னாவை பேணுவதில் வருகிறது , காரணம் , தான் எடுத்த கருத்தின் விதம் தான் சரி என்ற தவறான நினைப்பு நம் மனதில் வருவதால் , நம்மை தவிர மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று என்னத்தை ஷைத்தான் நம் மனதில் ஆழமாக பதிக்கிறான் . இதன் விளைவு , நம்முடைய  "இல்ம்" ( Knowledge) இன் வாசல் மூடப்படுகிறது . மேலும்  ஆக்ரோஷமாக, நாம் இருப்பது தான் நேர்வழி என்று வாதாடுவதினால் , அல்லாஹ்வினால் காட்டப்படும் நேர்வழி அடைக்கப்பட்டு , முஸ்லிம்களுக்குள் நாம் ஒரு தனி பிரிவினராக திகழ்கிறோம். 
 
 மேலும் ,  பிறையை நவீன விஞ்ஞானத்தை வைத்து கணக்கிட்டு , அதன் படி அமல் செய்வது தான் சரி என்ற விஷயத்தில் , சகோதரர் நிஜாம் எடுத்துகாட்டாக கூறும் கடிகாரம் , தொலைபேசி, மைக் , ஸ்பீக்கர்  போன்ற நவீன விஞ்ஞானம் , நாம் எதை இன்புட்டாக கொடுக்கிறோமோ , அதை அப்படியே வெளியே ( OUTPUT ) ஆக கொடுக்கும்.
 
எடுத்துகாட்டாக நீங்கள் தமிழில் " என் பெயர் நிஜாம் என்று சொன்னால் " அது அப்படியே தான் , இன்னும் சத்தம் கூட்டி சொல்லுமே தவிர  , வேறு ஒன்று புதிதாக ஒன்றை ஆராய்ந்து ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ மொழிபெயர்த்து கொடுக்காது . அப்படி கொடுத்தால் அதை முழுவதுமாக நம்பி , நபியின் ஹதீஸை அதற்க்கு ஒப்பிட்டு புதிய மார்க்க சட்டத்தை நிரூபணம் செய்தால் அது வழிகேட்டில் தான் முடியும் . அதே போல் தான் கடிகாரம் , தொலைபேசி ... etc .
 
அனால் நீங்கள் ஆராய்ந்து பார்த்து பிறை கணக்கிடும் நவீன விஞ்ஞானம் , இருப்பதை இல்லை என்றும் சொல்லும் , இல்லாததை இருக்கிறது என்றும் சொல்லும் . சில சமயம் இருப்பதை இருப்பதாகவே காட்டும் . அதற்க்கு உதாரணமாக பலதை சொல்லலாம் . கருவில் உள்ளது ஆண் பிள்ளை என்று சொல்லி பெண் பிள்ளை பிறப்பது , அதை ஊர்ஜிதம் செய்யும் "ultrasound " என்ற நவீன விஞ்ஞானம் . இதையெல்லாம் வைத்து நாம் புதியதாக மார்க்க சட்டங்கள் இயற்றினால் , நம்முடைய சட்டமும் , விஞ்ஞானம் தப்பு செய்யும் போது , நம் மார்க்க சட்டமும் U turn எடுக்க நேரிடும் . இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் , அது என்றைக்கும் தவறாகாது நபி சொன்னதை , அதன் மூலக் கருத்து மாறமால் செய்தால்.
 
சகோதரர் பைசல் அவர்கள் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அதற்க்கு விளக்கம் கொடுங்கள். மேலும் என் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுங்கள்.
 
1. நீங்கள் எங்கு தான்  அந்த பிறையை பார்த்தீர்கள் ?
 
2. பரங்கிபேட்டை யில் இருந்து எந்த நவீன விஞ்ஞானத்தை வைத்து பிறை பார்த்து அறிவிப்பு செய்தீர்கள் ?
 
3. அப்படி நீங்கள் பார்க்கவில்லை என்றால் , அந்த நவீன விஞ்ஞானத்தையும் , கருவியையும் வைத்து இன்டர்நெட்டில் அறிவிப்பு செய்தவனின் இணையத்தளம் , எவ்வாறு ஸஹிஹ்ஹான ( AUTHENTIC ) இணையத்தளம் என்று ஊர்ஜினம் செய்தீர்கள்.
 
4.  ஏதோ ஒரு இணையத்தளம் அறிவித்ததை வைத்து , எப்படி ஒரு புது மார்க்க சட்டம் நீங்கள் இயற்றிநீர்கள்?, முக்கியமாக ஹஜ் செய்யும் காலங்களில் ஒப்புக்கொள்ளபடாத, பொருந்தாத மார்க்க சட்டம்.  
 
5. மார்க்க விசயத்தில் ஒரு ஹதீஸின் படி அமல் செய்வதற்கு , எத்தனை ஆராய்ச்சி நாம் செய்கிறோம் . இது ஸஹிஹ் தானா !! இதனின் அறிவிப்பாளர் தொடர்ச்சியில் உள்ளவர் நம்பகமானவரா !! அவரின் வாழ்க்கை காலம் போன்ற எத்தனை ஆராய்ச்சி பண்ணுகிறோம் , அப்படி தானே ஒரு ஹதீஸின் படி அமல் செய்கிறோம் .  இந்த விஞ்ஞான பிறை பார்த்தலை , எந்த டெக்னாலஜி மூலமாக, எந்த கருவியை வைத்து, யார் பார்த்ததை , நீங்கள் அறிவிப்பு செய்தீர்கள். அதை பார்த்து அறிவிப்பு செய்தவர் யூதனா அல்லது முஸ்லீமா ?? நம்பக மாணவரா ??
 
அவரின் வாழ்க்கைக்காலம் ? எந்த இணையத்தளம் , அது உண்மை தான் என்று எப்படி உறுதி படுத்துவீர்கள் ??? .
 
கண்டிப்பாக, சிந்தித்து , அல்லாஹ்விடம் மட்டும் நேர்வழியை கேட்பவர்களுக்கு அல்லாஹ் நாடினால் அவன்  நேர்வழி காட்டுவான்
 
வஸ்ஸலாம் ,  செய்யத் உமர்
 
*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
 
ஸலாம்.
 
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,
 
நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மீண்டும் என்னிடம் கேள்விக் கேட்க ஆரம்பித்துள்ளீர்கள். கைர். அல்லாஹ் அவன் வேத்தின் தெளிவுகளையும் அதற்கு முரண்படாத அவன் தூதர் வழிமுறைகளையும் நமக்கு கற்றுக் கொடுப்பானாக....
 
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு எனது கேள்விகளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
 
1) நாம் உம்மி சமுதாயம்.எழுதவும் தெரியாது விண்கலையும் தெரியாது என்ற ஹதீஸின் இந்த வாசகம் அன்று வாழ்ந்த ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் குறிக்காது நிஜாம் நானா, நபி ஸல் அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது அவ்வளவு தானே தவிர அன்றும் பல துறைகளின் நுணுக்கங்கள் அறிந்த மக்கள் வாழத்தான் செய்தனர்  --  பைஸல்
 
உங்கள் வாதம் தவறென்று அந்த ஹதீஸே அறிவிக்கின்றது.
 
أمة أمية  நாம் உம்மி (எழுதப்படிக்கத் தெரியாத) சமுதாயம் என்றே நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.. நபி(ஸல்) உட்பட அன்றைக்கு வாழ்ந்த பெரும்பாலனவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது.  எழுதப்படிக்கத் தெரிந்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
 
இந்த வசனங்களை கவனியுங்கள்.
 
فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ ۗ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا ۖ وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِِ
 
அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப்படிக்கத் தெரியாத (உம்மிகளிடமும்); "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான் (அல்குர்ஆன் 3:20)
 
وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَِ
 
வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'எழுதப்படிக்கத் தெரியாதவர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.  (3:75)
 
எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்திற்குதான் எழுதப்படிக்கத் தெரியாத நபி அனுப்பப்பட்டார்கள்.  அவர்களில் ஒரு சிலரே எழுதப்டிக்கத் தெரிந்திருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 
 சகோதரர் பைஸல் அவர்களே சிந்தியுங்கள்.
 
உண்மையில் நீங்கள் சொல்வது போன்று நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் எழுதப்படிக்கத் தெரியாது என்றும்,  விண்கலைத் தெரியாது என்றும் நாம் எடுத்துக் கொண்டாலும் தனக்குத் தெரியாது என்று நபி(ஸல்) சொன்னப்பிறகும் - அதை நாம் விளங்கியப் பிறகும் அதையே மீண்டும் ஏன் வலியுறுத்த வேண்டும்?  விண்ணறிவியல் வேண்டாம் என்று நபி(ஸல்) சொல்லி இருந்தால் மட்டும் தானே நாம் அந்த முடிவுக்கு வர முடியும் அவ்வாறு எங்காவது சொல்லியுள்ளார்களா..?
 
எனவே அந்த சமுதாயத்தில் உள்ள பெரும்பாலோருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது - விண்கலைத் தெரியாது.  நபி(ஸல்) அவர்களுக்கும் அதே நிலைத்தான்.
 
எழுதப்படிக்கத் தெரிந்த - விண்கலையின் அறிவைப் பெற்ற மக்களையெல்லாம்  - அவர்களின் அறிவையெல்லாம் புறக்கணிக்க மார்க்கம் சொல்லியுள்ளதா...?  
 
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா?  கல்வியறிவு கொடுக்கப்பட்டவர்கள் அநேக நன்மைகளைப் பெற்றுவிட்டார்கள் என்றெல்லாம் அருள்மறை கூறிக் கொண்டிருக்கும் போது,  சூரிய அறிவியலை சிலாகித்து நம் மனங்கள் ஏற்றுக் கொண்ட போது,  சந்திரனுக்கு  மட்டும் ஏன் மாற்று நிலை என்றக் கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.  சூரியனுக்கும் -  சந்திரனுக்கும் ஒரே நிலையை எடுத்தாலாவது உங்கள் தரப்பில் ஓரளவு நியாயமிருக்கின்றது என்று கருதலாம்.  இரு வேறு நிலைப்பாடுகளை எடுப்பது உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா?
 
----பார்த்து என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் இருக்க அதை கொண்டு செயல்படுதல் தானே சிறந்தது, பார்க்கமுடியாத ஒன்றா முதல் பிறை?---பைஸல்
 
பார்த்து என்று நேரடி பொருள் வரும் இடங்களில் பார்த்து செயல்படுத்துவதுதான் சிறந்தது என்றால், அதில் நீங்களும், முதல் பிறையைப் பார்க்க வேண்டும் என்ற கருத்திலுள்ளவர்களும் கீழுள்ள நபிமொழிக்கு விளக்கம் கொடுங்கள்.
 
كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فقال لرجل انزل فاجدح لي قال يا رسول الله الشمس قال انزل فاجدح لي قال يا رسول الله الشمس قال انزل فاجدح لي فنزل فجدح له فشرب ثم رمى بيده ها هنا ثم قال إذا رأيتم الليل أقبل من ها هنا فقد أفطر الصائم
 
நோன்பாளி இரவு வருவதைக் கண்டால் - பார்த்தால் நோன்புத் திறக்கட்டும் (புகாரி நோன்பு பாடம்)
 
நியாய உணர்வுடன், பரந்த சிந்தனையுடன் இதற்கு பதிலளியுங்கள்.  உலகில் யாராவது ஒருவராவது - நேரடியாக பிறைப் பார்ப்பது போன்று நேரடியாக சூரியன் மறைவதைப் பார்த்து நோன்புத் திறக்கிறார்களா..?  பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு என்ன வார்த்தை வந்துள்ளதோ அதே வார்த்தையை நபி(ஸல்) இங்கு பயன்படுத்தி இரவு வருவதைப் பாருங்கள் என்கிறார்கள்.  பிறை நேரடியாக பார்ப்போர் - பார்த்துதான் ஆக வேண்டும் என்போர் நோன்புத் திறக்க என்ன வழிமுறையைக் கையாள்கிறார்கள் - பார்க்க வேண்டும் என்று நேரடி வார்த்தை வந்துள்ளது என்றெல்லாம் முதல் பிறைப்பார்ப்பதை நியாயப்படுத்துபவர்கள் அதே நேரடி வார்த்தை வந்துள்ள இந்த ஹதீஸை எடுத்து நோன்புத் திறக்கிறார்களா..? திறப்பார்களா..? முதல் பிறையைக் கூட பார்க்க முடியாமல் போகலாம் சூரியன் மறைவதை - இரவு வருவதை பார்க்க முடியாமல் போகுமா..? 
 
----இந்த வருட ஹஜ் மாதத்தை எங்கு பார்த்த பிறை கொண்டு நீங்கள் ஆரம்பிதீர்கள் என்று சொல்லுங்களேன்?---பைஸல்
 
முதல் பிறைப் பார்த்து மாதத்தைத் துவங்குவது இஸ்லாமா..? பிறைகளைப் பார்த்து வந்து மாதத்தைத் துவங்குவது இஸ்லாமா..? பிறைகள் தான் நாட்களை அறிவிக்கின்றது என்று அல்லாஹ் சொல்லியுள்ளபோது துல்காயிதா மாதத்துடைய 28,29 பிறைகளை எங்கு பார்த்தீர்கள் - மேற்கில் பார்த்தீர்களா என்று நான் கேட்டேன்.  அதற்கு பதிலளிக்காமல் அதற்கு அடுத்த மாதத்தின் முதல் பிறையை எங்கு பார்த்தீர்கள் என்று கேட்டுள்ளீர்கள்.  துல்காயிதா மாத பிறையில் தெளிவே நமக்கு இல்லாத போது துல்ஹஜ்ஜைப் பற்றி விவாதிப்பது பொருத்தமாகாது.  
 
ஒவ்வொரு மாதத்திற்கும் சந்திரனுக்கு பல்வேறு படிதரங்கள் இருக்கின்றது.  அது மாத இறுதியில் காய்ந்த பேரீத்த ஓலைப் போன்று ஆகிவிடும், அதற்கு அடுத்த நாள் பிறை உலகில் எங்குமே தெரியாது.  பிறைத் தெரியாத நாளை முந்தைய மாதத்துடன் சேர்த்து மாதத்தை முழுமைப்படுத்துங்கள் என்று குர்ஆனும் நபிமொழியும் தெளிவாக சொல்லி இருக்கும் போது அதற்கு அடுத்த நாள் துல்ஹஜ் மாதத்தின் பிறை இயல்பாகவே வெளிபட்டு விடும்.  இது இறைவன் வகுத்த அறிவியல் நியதி. 
 
இதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.
 
துல்காயிதாவின் உர்ஜுனில் கதீம் (பார்க்க அல்குர்ஆன் 36:39) 14-10-2012 ஞாயிற்றுக் கிழமை காலை பல பகுதிகளில் பார்த்து உறுதிப்பபடுத்தினார்கள். அதற்கு அடுத்த நாள் 15-10-2012 திங்கட் கிழமை அன்று பிறை் மறைக்கப்படும் நாள்.  உலகில் எங்கும் பிறைத் தெரியவில்லை.  நபி(ஸல்) கூறியுள்ளார்கள் பிறை உங்களுக்கு மறைக்கப்படும் அதை மாத இறுதியில் சேர்த்து மாதத்தை முழுமைப்படுத்துங்கள். என்று.  அந்த ஹதீஸ் அடிப்படையில் பிறை மறைக்கப்பட்ட அந்த நாளை துல்காயிதாவுடன் சேர்த்து அந்த மாதத்தை முழுமைப்படுத்திய பிறகு செவ்வாய்கிழமை முதல் பிறை (அதாவது 16-10-2012).   இங்கு நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது.  ஒவ்வொரு பிறையும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைக்கின்றது.   எந்த பிறையும் மேற்கில் தோன்றுவதில்லை.  பிறைத் தோற்றம் கிழக்குதான்.  16-10-2012 செவ்வாய்கிழமை  கிழக்கில் தோன்றி சூரியனுடன் பயணித்து சூரிய மறைவுக்கு பிறகு ஏறத்தாழ 45 நிமிடங்கள் கழித்து முதல் பிறை மறைந்தது.  மறையக்கூடிய அந்த பிறையை உலகில் பலநாடுகள் பார்த்தன.  மறையக் கூடிய பிறையை மஃரிபில் பார்த்து விட்டு அதற்கு அடுத்த நாள் முதல் பிறை என்று அறிவித்தன.
 
16-10-2012 செவ்வாய் கிழமை மறையக் கூடிய பிறையைப் பார்த்த ஆதாரங்கள்.
Seen by others in Brisbane QL: Engr Manzoor A Mian (MCW member) from Melbourne, VIC reported: Melbourne was cloudy and rainy today 16/10/12 Tuesday evening. We were unable to sight Dhul Hajjah Crescent in Melbourne.
 
Seen: Suleman Manjra (MCW member) reported: On Tuesday 16th October 2012, the Hilaal was sighted in Barbados just before Magrib Salaat.
 
Seen: Ahmad I. Adjie (MCW member) from Bandung reported: The Hilal was SEEN today 16 October 2012 at Patra beach, near Ngurah Rai airport, Bali, Indonesia
 
இப்படியே வரிசையாக சொல்லலாம். 
 
 ஆனால் இது பிறந்த முதல் பிறையா.... பிறந்து மறையக் கூடிய முதல் பிறையா...  மஃரிபில் பிறை பார்த்து அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று அறிவித்தால்  மஃரிபுக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு முன்பு வெளிபட்டு சூரிய இயக்கத்துடன் சேர்ந்து வந்த பிறையின் அந்த ஓட்டத்தை எதில் சேர்ப்பது?
 
பிறைகளில் அனைத்துப் படிதரங்களையும் பார்த்து வரும் போது உர்ஜுனில் கதீம் என்ற மாதத்தின் இறுதி பிறையை பார்க்க முடியும்.  அடுத்த நாள் மறைக்கபடும் நாள் அதை அந்த மாதத்துன் சேர்த்து மாதத்தை முழுமைப்படுத்தி விட்டு அடுத்த முதல் பிறையை அடைந்து அந்த பிறை மறையும் போது உலகின் பல பகுதிகளில் அதை பார்த்து விட முடியும்.
ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குர்ஆன் மற்றும் விளக்கமான நபிமொழிகள் இவற்றிர்க்கு உட்பட்ட விஞ்ஞான உண்மைகள் ஆகியவற்றை அணுகினால் பிறை பற்றிய குழப்பமில்லாத ஒரு தெளிவான நிலைப்பாட்டை - இறைவன் வகுத்தளித்த பிறை நாள்காட்டியை புரிந்துக் கொள்ள முடியும்.  
 
சகோததர் செய்யத் உமர் அவர்களுக்கு,  உங்களின் கேள்விகளுக்கு இங்கு பதில் அடங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.  விடுபட்டிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
 
ஒலி பெருக்கி இன்புட் - அவுட் புட் பற்றி கூறி இருந்தீர்கள்.
 
நான் கேட்டதை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை அல்லது புரியும் படி நான் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.
 
நபி(ஸல்) பெருநாளைக்கு ஆண்களுக்கு - பெண்களுக்கென்று இரண்டு உரை நிகழ்த்தியுள்ளார்கள்.  நாம் அறிவியல் நுட்ப வளர்ச்சியால் ஒரு உரையாக ஆக்கிக் கொண்டோம்.
 
நபி(ஸல்) காலத்தில் தொழுகை நேரங்களை சூரிய இயக்கத்தை வைத்து நேரடியாக அறிந்தார்கள்.  நாம் பல ஆண்டுகளுக்கான தொழுகை நேரங்களை அறிவியல் நுட்ப வளர்ச்சியைக் கொண்டு அறிந்து செயல்படுகிறோம்.
 
நபி(ஸல்) காலத்தில் கத்தியைக் கொண்டு அறுத்தே குர்பானி கொடுத்தார்கள்.  இன்றைக்கு லட்சக்கணக்கான ஆடுகளை அறுக்க வேண்டும் என்பதால் கில்லட் கருவி போன்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.
 
இது போன்று இன்னும் பல...
 
இறைவன் பிறைப் பற்றிய தெளிவையும் - நெருக்கமான அறிவையும் நமக்கு வழங்கட்டும். ஜி.என்
 
-*-*-*-*-*-*-*--*-*-*-*

அழைக்கும் சலாம் நிஜாம் நானா,தங்கள் பதிலுக்கு நன்றி,
 
 நபி ஸல் காலத்தில் வாழ்ந்த ஒட்டுமொத மக்களும் எழுத படிக்க தெரியாதவர்கள் இல்லை , பல துறைகளின் நுணுக்கங்கள் அறிந்த மக்களும் அன்றைய காலத்தில் இருந்தனர், விவசாயம், போர் நுணுக்கங்கள், மருத்துவம் இதுபோன்ற துறைகளில் நுணுக்கங்கள் உடையவர்கள் இருக்கத்தான் செய்தனர், படித்தவர்கள் அதிகம்  உம்மிகள் குறைவு என்று நான் எங்கும் சொல்லவில்லை.
 
 உர்ஜூணில் கதீம் என்ற கடைநிலையை வைத்து மாதத்தை துவங்க முடியும் என்பதாக தாங்கள் சொல்லி உள்ளீர்கள், நபி ஸல் அவர்களும் அன்றைய மக்களும் அவர்களின் கால கணக்கை சந்திரனை கொண்டே அமைத்து கொண்டனர் அவர்களும் உர்ஜூணில் கதீமை அடைந்தனர், ஆனால் அதை ஆதாரமாக கொண்டு மாதத்தை ஒருபோதும் துவங்கவில்லை மாறாக பார்க்கபட்டதன் அடிப்படையில் ஊர்ஜிதமாக மாதத்தை துவங்கினர் என்பதை புரியவும் .
 
சூரிய மறைவு அடிப்படையில் நோன்பு திறத்தல் என்பதை நீங்கள் குறிப்பது இருக்குறீர்கள், நிஜாம் நானா இன்றும் கடிகாரம் இல்லாமல், நோன்பு அட்டவணை இல்லாமல் ஒருவரால் நோன்பு திறக்க முடியும், ஏனெனில் சூரிய மறைவு என்பது அன்றாட நிகழ்வு, அதைப்போலவே அல்லாஹ்வின் அத்தாட்சியான சந்திரனின் அணைத்து நிலைகளும் பார்க்க முடியதாகவே இருக்கிறது, எனவே ஊர்ஜிதபடுத்தி இபாதத்தை துவங்குதல் என்பது தானே சிறந்ததாக இருக்கும்.
 
விண் அறிவியல் வேண்டாம், அதை பற்றி சிந்திக்க வேண்டாம் என்று ஒருபோதும் யாரும் சொல்வதில்லை நிஜாம் நானா, மாறாக மனித கணிப்புகளில் தவறுகள் நிகழ அதிக வாய்ப்பு இருப்பதாலும், மனித கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு, மாறுதலுக்கு உட்பட்டது என்பதாலும், அல்லாஹ்வின் அத்தாட்சியான சந்திரனின் சுழற்சி வெளிபடையாக பார்க்க கூடியதாக இருப்பதால் பார்த்து செயல்பட வேண்டும் அதுவே ஹதீசுக்கு மிக நெருக்கமான புரிதலின் நிலையாகும் என்பதை தான் சொல்கிறோம்,  நன்றி
. சகோ.பைஸல்
 
*-*-*-*-*-*-*-*-*-*

ஸலாம்
 
நபி ( ஸல் ) அவர்கள் பிறையை எங்காவது காலையில் பார்க்கும் படி கூரி  ஊள்ளார்களா . ஹதீஸ் இருந்தால் பார்வைக்கு தரும் படி கேட்டு கொள்கிறேன்.
முஹம்மது ஜமில்
 
-*-*-*-**-*-*-*
 
அஸ்ஸலாமு அழைக்கும்  ( வராஹ் )
 
சகோதரர் நிஜாம் நானா கூறுவது போல் காலையில் பிறை தோன்றுகின்றது என்றால் " பிறையை பார்த்து நோன்பு வையுக்கள் " என்ற நபி ( ஸல் ) மொழி படி நாம் பிடிக்கும் நோன்பு 2வது பிறை என்ற ஆகிவிடும்.
 
இது சரி என்றால் நபி ( ஸல் ) அவர்கள் காலத்தில் அவர்களும் 2வது பிறையை தான் முதல் பிறை என்று கணக்கில் கொண்டு நோன்பு வைத்தார்களா ?
 
நிஜாம் நானாவின் கூற்று படி முதல் பிறையை பாற்பது கடிணம் அல்லது காலையில் தான் பார்க்கமுடியும் என்றால் நபி ( ஸல் ) அவர்களே 2வது பிறையை தான் முதல் பிறை என்று என்னி  நோன்பு வைத்துள்ளார்கள் !
 
நபி (ஸல்) அவர்கள் எதை செய்தார்களோ அதை நாமும் கடைபிடிப்போம்.
 
தேவை  இல்லா விவாதங்களை தவிர்த்து நபி (ஸல்) மொழி படி " பிறை பார்த்து நோன்பு வையுங்கள் " என்ற ஹதிஸை ஆதாரமாக கொண்டு நாம் நமுஉடையை அமல்களை செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்குலியையும் நேர்வழியும் காட்டுவானாக.
 
முஹம்மது ஜமில்
 
பகுதி இரண்டில் மீதி பதிவுகள் வரும்
 
 
 
 

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks